Monthly Archives: May 2024

மோடி ஜி, மோடி பாபா… சுவாமி மோடி? 🤭

“ஹிட்லர் உமாநாத்” என்ற திரைப்படத்தில் நடிகர் திலகமும், சுருளி ராஜனும் நடித்திருப்பார்கள். ஒரு தொழிற்சாலையில், கடைநிலை ஊழியராக தனது வாழ்வை தொடங்கும் சிவாஜி, தனது உழைப்பால், நேர்மையால் படிப்படியாக உயர்ந்து, அந்நிறுவனத்தின் முதலாளியாக ஆகிவிடுவார். சுருளிராஜனோ பின்வரும் வழியை தேர்ந்தெடுத்து, இறுதி வரை கடைநிலை ஊழியராகவே இருப்பார்:

– குடிசையில் வாழ்ந்து வந்த உமாநாத் பதவி உயர்வு பெற்றவுடன் புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்து விடுவார். அவரது குடிசைக்கு குடி வரும் சுருளிராஜன், “இந்த குடிசையில இருந்துதான் உமாநாத் உயரப் போனான். நானும் இங்கேயிருந்து, வாழ்க்கையில மேல போகப் போறேன்.” என்பார்!

– குடிசைக்குள் படுத்து கொண்டிருக்கும்போது, கூரையில் சொருகப்பட்டிருக்கும் ஓர் அலுமினியத் தட்டு அவரது கண்ணில் படும். அதையெடுத்து, “இதுல சாப்புட்டுத்தான் உமாநாத் மேல போயிருக்கிறான். நானும் இதுல சாப்பிட்டு மேல போகப் போறேன்.” என்பார்!

☺️

இது போன்று, “சுவாமி விவேகானந்தர் வடக்கிருந்த இடத்தில், நாமும் வடக்கிருந்தால், அவரைப் போல நாமும் புகழடைவோம்.” என்று நம்ம ஜி எண்ணிவிட்டார் போலிருக்கிறது! 😁

நம்ம ஜி ஏற்கனவே “வோர்ல்ட் ஃபேமஸ்” -தான். ஆனால், சுவாமிகள் போன்ற ஃபேமஸ் இல்லை. “ஏழு பிறவிக்கும் வில்லன்டா”-வகை ஃபேமஸ்!! 😄 அதை மாற்றுவதற்கான “சுருளிராஜன்” முயற்சியாக இப்போதைய வருகை இருக்கலாம்.

oOo

“தியானம்” என்ற அசுரச்சொல்லின் நேர் திருநெறியத் தமிழ்ச்சொல் “சிந்தனை” ஆகும்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் வாழ்விலிருந்து ஓர் அருமையான நிகழ்வு:

ஒரு நாள், ஓர் ஏழு வயது நிரம்பிய சிறுவன் பகவானிடம் வந்து, “பகவானே, எனக்கு சிந்திக்க (தியானிக்க) கற்றுத் தரவேண்டும். எனது வீட்டில் கேட்டால், ‘இப்போது அது பற்றி தெரிந்து கொள்ளத் தேவையில்லை. நேரம் வரும்போது தெரிந்து கொள்வாய்.’ என்கிறார்கள்.” என்று கூறினான். பகவானும், “சரி. இப்படி என் பக்கத்தில் அமர்ந்து கொள். நான் சொல்லிக் கொடுக்கிறேன்.” என்றார்.

சற்று நேரத்தில், ஓர் அன்பர் ஒரு வாளி நிறைய தோசைகள் கொண்டு வந்தார். எல்லோருக்கும் அவை பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஒரு தோசையை எடுத்து, அச்சிறுவனிடம் கொடுத்த பகவான், “இதோ பார்! நான் விரலை உயர்த்தி, ‘உம்’ என்று சொல்லும் வரை சாப்பிட்டுக் கொண்டிருக்கவேண்டும். அதற்கு முன்னர் முடிக்கக்கூடாது. நான் சொல்லும் போது, தட்டில் மீதமும் இருக்கக் கூடாது.” என்றார். அதற்கு தலையாட்டிய சிறுவன், பகவானை பார்த்துக் கொண்டே சாப்பிடத் தொடங்கினான். தொடக்கத்தில், பெரிய பெரிய துண்டுகளாக சாப்பிட்டவன், பின்னர், சிறிய சிறிய துண்டுகளாக சாப்பிட்டான். பகவான் விரலை உயர்த்தி “உம்” சொன்னவுடன், மீதமிருந்த தோசைத்துண்டை வாயில் போட்டு முடித்துக்கொண்டான்.

அவனைப் பார்த்து பகவான் சொன்னார், “இப்போது நீ என்ன செய்தாயோ, அதற்கு பெயர்தான் சிந்தனை (தியானம்)! என் மீது கருத்தை வைத்துக்கொண்டு, செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாய். இதுபோன்று, உனது தன்மையுணர்வின் மீது கருத்தை வைத்துக் கொண்டு, அன்றாட வாழ்வை வாழ்ந்து கொண்டிரு.” 🌺🙏🏽🙇🏽‍♂️

oOo

மேற்கண்ட நிகழ்வை, உளுத்தறிவு கொண்டு ஏடாகூடமாக சிந்தித்தால், “ஒன்றை நினைத்து ஒன்றை செய்வதே சிந்தனையாகும் (தியானமாகும்)” என்ற முடிவு கிடைக்கும்! 😜 இது அப்படியே நம்ம ஜி-க்கு பொருந்தும்.

நம்ம ஜி-யின் 24×7 பணியோ நாட்டின் முதலமைச்சர். அவரது 24×7 சிந்தனையோ:

– வெளிச்சம் நல்லா விழுந்திருக்குமா

– கேமரா ஆங்கிள் சரியா இருக்குமா? 

– தலைமுடி சரியா படிஞ்சிருக்கா? 

– பளிச்சுன்னு இருக்கேனா?

– இதுக்கு எத்தன லைக் கிடைக்கும்?

இவ்வகையில், நம்ம ஜி எப்போதும் சிந்தனையில்தான் (தியானத்தில்தான்) இருக்கிறார்! 😃

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

நித்ய சாசுவத அசுராசுர யுத்தம்! 😜

இன்று, பெண்குறியை (நாமம்) வரைவதில் தொடங்கி, பலவற்றிற்கு அடித்துக் கொள்ளும் இவர்கள், இதற்கு முன்னர், பௌத்த மொட்டைகளாக இருந்தபோது எதற்கு அடித்துக் கொண்டிருப்பார்கள்? யாரை, எப்படி மொட்டையடிப்பதென்றா? 😀

அதற்கும் முன்னர், வாயில் போடவேண்டியதை நெருப்பில் போட்டு (வேள்வி), கரியாக்கி கொண்டிருந்தபோது, எதற்கு அடித்துக் கொண்டிருப்பார்கள்? யாரிடம், எப்படி படங்காட்டலாம் என்றா? அல்லது, அசுரச் செய்யுட்களை (அசுரத்தில், மந்திரம்) உருட்டுவதிலா? 😃

எல்லாவற்றிற்கும் முன்னர், அவர்களது தாயகமான ரிஷிவர்ஷாவில் சுற்றிக் கொண்டிருந்தபோது, எதற்கு அடித்துக் கொண்டிருப்பார்கள்? வேட்டையாடிய பனிச்சிறுத்தை, பனிக்கரடிகளை பங்கு போட்டுக் கொள்வதிலா? 😄

😆

💥 நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றி விட்டாயா?

💥 மொட்டை போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

💥 நாம & மொட்டை மதங்கள் = ஏமாற்று வேலைகள்!

வடக்கிலிருந்து வந்த அம்மணம் (சமணம்), மொட்டை (பெளத்தம்), மொட்டையிலிருந்து தோன்றிய பெண்குறி (நாமம்) & கரியாக்குதல் (வைதீகம்) என எதுதான் ஏமாற்று வேலையில்லை? 👊🏽👊🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

மோடி பாபா!! 😃

ஜி,

மோடி ஜி“-ன்ற நிலையிலிருந்து “மோடி பாபா“-ங்கற நிலைக்கு, நீங்க நகர முயற்சிக்கிறீங்கன்றது நல்லா தெரியுது. ஆனா, இன்னும் பயிற்சி எடுக்கணும், ஜி. ஏன்னா, நீங்க மட்டுமில்லை, உங்க நண்பரான அமெரிக்க புறம்போக்கும் (பில் கேட்ஸ்) இறைவனின் படைப்புதான். உங்க ஊரு மாலிக்காஃபூரும் இறைவனின் படைப்புதான். எங்க ஊரு இராமசாமியும் இறைவனின் படைப்புதான். தூசு முதல், நீங்க ஒக்காந்து தேச்சுட்டிருக்குற கட்டிடம் வரைக்கும், எல்லாமே இறைவனின் படைப்புதான். வேணும்னா, உங்க பூசாரி கூட்டத்துக்கிட்ட கேட்டுப் பாருங்க, ஜி. படங்காட்டுறதுக்குனே பொறந்தவங்க. நல்லா சொல்லிக் கொடுப்பாங்க.

அப்புறம் ஜி, நீங்க குறிப்பிட்ட “இறைவனின் திருப்பணி”-ங்கறது இதுதானே:

– தெற்கினுடைய செழிப்பை வடக்கிற்கு மாற்றுவது

– பணம் படைத்த பொதுமக்களிடமிருந்து கறந்து, பரம ஏழைகளான அம்பானி & அதானி வகையறாக்களுக்கு கொடுப்பது

சரியா, ஜி? மன்னிக்கவும். சரியா, பாபா? 😜

✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽👊🏽

“தமிழ் தான் எனது மூச்சு, பேச்சு, வாட்சு” என்று ரீல் விட்ட உயிரிகள், இன்று, “ஒடிசாவை தமிழன் ஆளலாமா?”, “தொலைந்து போன பூரி கோயிலின் கருவூலச் சாவிகள் தமிழ்நாடு சென்றிருக்கும்”, “உ.பி. தலைவர்களை தமிழ்நாட்டில் கிண்டலடிக்கிறார்கள்” என்று பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன்?

இனி என்ன செய்தாலும் தமிழ்நாட்டை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்துவிட்டதால், இருக்கும் வடக்கத்திய ஓட்டு வங்கியையாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு இறங்கியிருக்கிறார்கள்.

இவ்விரு உயிரிகளால் இந்து சமயத்திற்கு கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு… கோவிந்தா.. கோவிந்தா!! 😮‍💨

oOOo

எச்சில் இலைகளின் மேல் புரண்டால் நோய்தான் வரும்!!

அசுரத்தில், உச்சிஷ்டம் = தென்தமிழில், எச்சில்.

🌷 பகவானது உச்சிஷ்டம் = பகவானிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரைகள்.

அறிவுரைகள் என்பது சொற்றொடர்கள். சொற்றொடர்கள் என்பது ஒலிக்கோர்வைகள். ஒலிக்கோர்வைகள் பயணிக்க காற்றுவேண்டும். பகவானது வாயிலிருந்து காற்று வெளிப்படும்போது, முதலில், அவரது எச்சில்பட்டு, பிறகே வெளிப்படுகிறது. எனவே, அவரிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரைகளை, அவரிடமிருந்து வெளிப்பட்ட எச்சில் என்று கூறினார்கள். “அவரது எச்சிலை உண்டேன்” என்று சொல்வதால் செருக்கு குறையும் என்று கருதினார்கள்.

🌷 பகவானது உச்சிஷ்டத்தை உண்டேன் = பகவானது அறிவுரைகளை உள்வாங்கினேன் / படித்தேன்.

🌷 பகவானது எச்சில் இலையில் புரண்டேன் = பகவானது அறிவுரைகளின் படி, ஒவ்வொரு நொடியும் வாழ்ந்தேன் / பகவானது அறிவுரைகளில் மூழ்கிக் கிடந்தேன் / பகவானது அறிவுரைகளை இடைவிடாது சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

பெரியவர்கள் சொன்ன அறிவுரைகளின் உட்பொருளையுணர முயற்சிக்க வேண்டுமேயொழிய, அவ்வறிவுரைகளை அப்படியே செயல்படுத்த முயற்சிக்கக்கூடாது.

மேலும், பிராமணன் என்ற சொல், பகவான் போன்ற மெய்யறிவாளர்களை குறிக்கும். ரிஷிவர்ஷாவிலருந்து (இன்றைய இரஷ்யா. குறிப்பாக, உஸ்பெக் & கஸக் பகுதிகள்.) வந்த அசுரக்கூட்டத்தை குறிக்காது.

🌷 பிராமணனது எச்சிலில் புரளு = மெய்யறிவாளர் காட்டிய வழியில் பயணி / அவரது அறிவுரைகளை இடைவிடாது சிந்தித்துக் கொண்டிரு.

(இவையாவும் அசுரக்கூட்டத்தின் பெரியோர்களுக்கு தெரியாது போலிருக்கிறது! 😏 தெரிந்திருந்தால், பைத்தியக்காரத்தனமான இவ்வினைமுறையை (அசுரத்தில், சடங்கை) தடுத்து நிறுத்தி, மக்களை உய்வடையச் செய்திருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்! 😜)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

கம்பர் பெருமானுக்கும் குறிமதத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது?

மற்றெல்லா போட்டிகளுக்கும் வயது வரம்பு உண்டாம். குறிமத போட்டிக்கு மட்டும் கிடையாதாம்! 😏

ஒப்பாரி மதம், ஈன வெங்காய மதம், அம்மண மதம், மொட்டை மதம் என எல்லாம் எங்கே போயின? ஊடகங்களை, திரை & விளம்பரத் துறைகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது போல, பேச்சுப் போட்டிகளையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் குறிமதத்தினர் கொண்டுவந்துவிட்டனரா?

இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தவேண்டிய தலையெழுத்து திரு கம்பவாரிதி ஐயாவுக்கு! 😒

oOo

கம்பர் பெருமானை 🌺🙏🏽🙇🏽‍♂️ இராமனின் கதைக்காக நாம் அறிந்திருக்கக்கூடாது. அவரது தென்தமிழுக்காக அறிந்திருக்கவேண்டும். பொய்பிளை அன்னைத்தமிழுக்கு மாற்றிக்கொடுத்த திரு ஆறுமுக நாவலரை எவ்வாறு அறிந்திருக்கிறோம்? பொய்பிளுக்காகவா? என்றுமுள தமிழுக்காக! தென்னாடுடைய கடவுளின் சமயத்திற்காக!! இவ்வாறே, அசுரர்களின் ஒரு பிரிவினர் கேட்டுக்கொண்டனர் என்பதற்காக, வான்மீகி இராமாயணத்தை திருநெறியத் தமிழுக்கு மாற்றிக்கொடுத்த கம்பர் பெருமானை, இராமாயணத்தோடு இணைத்து அறியக்கூடாது. அவரது தீந்தமிழுக்காக அறிந்திருக்கவேண்டும்.

பெண்குறி (நாமம்) மதத்தின் கொள்கைகளில் அவருக்கு உடன்பாடு இருந்திருந்தால், அவற்றை கடைப்பிடித்திருந்தால், நாட்டரசன்கோட்டையில் உள்ள அவரது திருவிடத்தை (அசுரத்தில், சமாதியை), ஓர் இராமனின் வடிவமல்லவா அணி செய்து கொண்டிருக்கவேண்டும்? தென்னாடுடையவனின் சின்னமல்லவா (அசுரத்தில், சிவலிங்கம்) அணி செய்துகொண்டிருக்கிறது!!

oOo

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

— கடவுள் வாழ்த்து, கம்பராமாயணம்

இன்னாருக்குப் பிறந்து, இன்னாரை மணமுடித்து, இன்னாரை கொன்று, இன்ன நாட்டினை ஆண்டு, மடிந்த ஒருவரை கம்பர் பெருமான் வணங்கவில்லை. தனக்குவமை இல்லாத உள்ளபொருளையே வணங்குகிறார்.

oOo

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

— திருக்குறள் #588

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻