Monthly Archives: September 2020

மெய்கண்டாருக்கு நடந்த கைங்கர்யம்!! 😠😡🤬

மெய்கண்ட சிவம் 🌺🙏🏽

சிவஞானபோதம் எனும் ஒப்பற்ற சாத்திர நூலைப் படைத்தவர். நம் சமயத்தின் புற சந்தான குரவர்களில் முதன்மையானவர். 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திரு சுந்தரமூர்த்தி நாயனார் 🌺🙏🏽 தடுத்தாட்கொள்ளப்பட்ட திருத்தலமான திருவெண்ணெய்நல்லூரில் (திருஅருட்துறை) சமாதியடைந்தார் (மேலுள்ள படம் பெருமானின் சமாதியாகும்).

இப்பெருமான் பிறந்த காலத்தில் வேற்று இனத்தவர் நம் தமிழகத்தில் கோலோச்சத் தொடங்கிவிட்டனர். “அதெப்படி மிகச்சிறந்த சாத்திர நூலைப் படைத்த பெருமை ஒரு தமிழனுக்கு கிடைக்கலாம்?” என்று உயரிய எண்ணம் கொண்டு, அந்நூல் ஒரு ஆரிய நூலைத் தழுவி எழுதப்பட்டது என்று கதை கட்டிவிட்டு மெய்கண்ட பெருமானின் புகழுக்கு களங்கம் விளைவித்தனர். 😠😡🤬 அதன் பின், நம்மவர்கள் ஆராய்வுகள் வழியாக “சிவஞானபோதம் தான் மூல நூல்” என்ற உண்மையை நிலைநிறுத்த வேண்டியதாயிற்று.

நல்லவேளை, 63 நாயன்மார்களும் 🌺🙏🏽 அவ்வினம் வந்து சேரும் முன்னரே சிவபதம் அடைந்துவிட்டனர். வந்த இனம் நிலைபெற்று கோலோச்சும் முன்னரே சேக்கிழார் பெருமானும் 🌺🙏🏽 பெரியபுராணம் பாடிவிட்டார். இல்லையெனில், நாயன்மார்களுக்கும், பெரியபுராணத்திற்கும் கைங்கர்யம் நடந்திருக்கும்!

ஆனாலும், கைங்கர்யம் வேறு விதத்தில் நடந்தது. நாயன்மார்களின் வரலாற்றை அவர்களது மொழியில் எழுதும் போது புகழ் பெற்ற சில நாயன்மார்கள் அவர்களது முற்பிறவியில் அவ்வினத்தவராக அல்லது அவ்வினத் தொடர்பில் பிறந்தவர்களாக புனைந்துள்ளனர். அந்த கைங்கர்யங்கள் சொற்பொழிவுகள், கட்டுரைகள் என பல வழிகளில் தமிழகத்திற்குள் நுழைந்துவிட்டன. நாயன்மார்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புவோர் பெரியபுராணத்தை மட்டுமே படிக்கவேண்டும்.

பகவான் திரு ரமணரும் 🌺🙏🏽 நம்மவராகப் பிறந்து, அவரது புகழும் வெள்ளையர்களால் உலகெங்கும் பரவாமல் போயிருந்தால் அவருக்கும் மெய்கண்டாருக்கு நடந்த கைங்கர்யம் நடந்திருக்கும்! 😏

இன்றும் பகவானை ஒதுக்கும் “பாரம்பரிய” சிந்தனை கொண்டோர் அவ்வினத்தில் உள்ளனர். காரணம் உள்ளபொருள் (பரம்பொருள்), மெய்யறிவு (ஞானம்), விடுதலை (முக்தி / மோட்சம்) என எல்லாவற்றைப் பற்றிய உண்மைகளையும் பகவான் வெளிவிட்டுவிட்டார். பகவானே இதைப் பற்றி பாடியிருக்கிறார்:

வெளிவிட்டேன் உன் செயல் வெறுத்திடாது உன் அருள்
வெளிவிட்டு எனைக்கா அருணாசலா!!

இதற்கும், சமயவியலில் உள்ள பொருள்கள் முழுவதும் நம்முடையதே. இவர்கள் எதையும் அவர்களது பிறப்பிடத்திலிருந்து கொண்டுவரவில்லை. இங்கு வந்துதான் நம்மிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்; பண்பட்டார்கள். கற்றதை அவர்களது பூமிக்கும் எடுத்துச் சென்றார்கள்.

🔸 நாம் எவ்வளவு தூரம் பண்பட்டிருந்தோம் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு:

மேல்தட்டு முதல் அடித்தட்டு வரை நம் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் அனைவரும் அறிந்திருந்த ஒரு சொல் தான் சிவம். “சிவம் என்றால் என்ன?”, “சிவமாயிருத்தல் எவ்வாறு?” ஆகிய கேள்விகளுக்கு பதில்கள் அறிந்திருந்ததால் தான், “சித்த நேரம் சிவனேன்னு கிடக்க வேண்டியதுதானே” என்று நம் பெரியவர்களால் திட்டமுடிந்தது! திட்டுவதில் கூட சமயவியலை நுழைத்த இனம் உலகில் நம்முடைய இனமாகத்தான் இருக்கும்!! 😊

🔸 நமது மொழி எவ்வளவு தூரம் சமயவியலை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு:

திட்டு என்ற சொல்லை சற்று பார்ப்போம்.

பொதுவாக, திட்டு எனில் சமதளத்திலிருந்து சற்று உயர்ந்த சிறு பகுதி. திட்டுத்திட்டாக எனில் ஆங்காங்கே உயர்ந்து கிடக்கும் பகுதிகள்.

சமதளத்தை திட்டுகள் இல்லாத பகுதி, ஏற்றஇறக்கங்கள் இல்லாத பகுதி, வேறுபாடுகள் இல்லாத பகுதி, சீரான பகுதி என்றும் விளக்கலாம்.

சமதளம் – சீரான பகுதி
திட்டு – சீரற்ற பகுதி

நமது உள்ளநிலை சீராக இருப்பின் சிவநிலை. திட்டும்போது சீரற்று போவதால் சிவநிலையின் எதிர் நிலையான சீவநிலை.

“என்னை திட்ட வைக்காதே” எனில் “என்னை சிவநிலையில் இருந்து இறங்க/மாற வைக்காதே” என்று பொருள்!! 💪🏽😍😎

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #71 – ஐயர், அந்தணன், பிராமணன், சதுர்வேதியன் & வேள்வி – சிறு விளக்கம்

மால்ஊன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
கால்ஊன்றி ஆளக் கருணையாய்க் – கோல்ஊன்றித்
தந்த விருத்த சதுர்வே தியன்ஆக
வந்தமலை அண்ணா மலை

— அண்ணாமலை வெண்பா – #71

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

திருவெண்ணெய்நல்லூரில் நடக்கவிருந்த திரு சுந்தரமூர்த்தி நாயனாரின் 🌺🙏🏽 முதல் திருமணத்தை தடுத்தி நிறுத்தி அவரை எம்பெருமான் ஆட்கொண்ட வரலாற்றைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர்.

🔸 திருவெண்ணெய்நல்லூர் (திருஅருட்துறை) – மூலவர் ஆட்கொண்டநாதர் 🌺🙏🏽. இதன் கீழ் சமாதியாகியிருக்கும் பெருமான் தான் நாயனாரைத் தடுத்தாட்கொண்டதாக தொன்நம்பிக்கை.

இவ்வூரில் தான் சிவஞானபோதம் எனும் ஒப்பற்ற சாத்திர நூலைப் படைத்த மெய்கண்ட சிவம் 🌺🙏🏽 சமாதி அடைந்துள்ளார்.

🔸 சதுர்வேதியன் – நான்கு மறைநூல்களையும் கற்றவர். எனில், நான்கு உயர்ந்த சொற்றொடர்களின் உட்பொருளை அறிந்தவர் (1. உணர்வே உள்ளபொருள், 2. அது நீயே, 3, நானே உள்ளபொருள், 4. இந்த உயிரே உள்ளபொருள்)

இதை வாய்ப்பாகக் கருதி பெரும்பாலும் தவறாகவே பொருள் கொள்ளப்படும் மேலும் சில சொற்களையும் பார்ப்போம்:

🔹 ஐயர் – கற்றறிந்தவர், பெரியவர்.

🔹 அந்தணன் – எவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காதவர் / இழைக்காதவர்

🔹 பிராமணன் – பிரம்மம் எனில் பரம்பொருள் / உள்ளபொருள். பிராமணன் எனில் உள்ளபொருளாய் உள்ளவர். உள்ளபொருளை அறிந்தவர்.

🔹 வேள்வி – உடல் என்னும் குண்டத்தில் எரியும் நெருப்பான தன்மையுணர்வில், மனதில் தோன்றும் எண்ணங்கள் என்னும் குச்சிகளை (சுல்லிகளை) போட்டுக்கொண்டிருப்பதே வேள்வி. வேள்வியின் விளைவால் தோன்றும் புகையென்பது மெய்யறிவாளரிடமிருந்து வெளிப்படும் நல்லுரைகள் (பகவான் திரு ரமணரிடமிருந்து 🌺🙏🏽 வெளிப்பட்ட “நான் யார்?” போன்று). வேள்விப்புகை காற்றை சுத்தப்படுத்துவது போல் மெய்யறிவாளரின் நல்லுரைகள் கேட்போரின் மனதை சுத்தப்படுத்தும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

காரைக்கால் அம்மையார் எனும் இரத்தினம்!! 🌺🙏🏽

சிவபெருமான் உணர்ச்சிவசப்பட்டாராம்!!!

“மாமனார், மாமியார் இல்லாமல் வாழ்க்கை நிறைவு பெறாது” என்றாராம் உமையன்னை!! (ஏன் நாத்தனார், ஓரகத்திப் பற்றியெல்லாம் கேட்கவில்லையா? வாழ்க்கை இன்னும் சுவையாக இருக்குமே!)

“மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு” என்று மது புட்டிகளில் அச்சிட்டிருப்பது போல், “புகையிலை புற்றுநோயை உருவாக்கும்” என்று வெண்சுருட்டு பெட்டிகளில் அச்சிட்டிருப்பது போல், “புருடாக்கள், படிப்பவரின் மூளைக்கும், நம் சமயத்திற்கும் கேடு” என்று புருடாக்களின் கீழ் அச்சிடவேண்டும் என்று சட்டம் வரவேண்டும்!

மனதை கொள்ளை கொள்ளும் ம.செ.வின் ஓவியத்தை ஒரு பக்கம் கொடுத்து விட்டு, இன்னொரு பக்கம் இரண்டாம்தர இதழ்களுக்கும், மட்டமான மெகாத் தொடர்களுக்கும் உரையாடல் எழுதிக் கொண்டிருப்பவரை வைத்து தயாரித்த புருடாவைக் கொடுத்திருக்கிறார்கள்!

oOOo

நம் திருத்தலங்களில் உள்ள நாயன்மார்கள் கூடத்தில் பேயாரை (காரைக்கால் அம்மையாரை) 🌺🙏🏽 மட்டும் அமரவைத்துப் போற்றியிருப்பார்கள் நம் முன்னோர்கள். இதற்கான காரணங்கள்:

🌷 63 நாயன்மார்களில் மூத்தவர்
🌷 செயற்கரிய செயல்களைச் செய்தவர்
🌷 “தமிழ் இசையின் தாய்” என்று போற்றப்படுபவர். நட்டபாடை, இந்தளம் ஆகிய பண்களை தமிழுக்கு தந்தவர்.
🌷 வெகு பின்னாளில் தோன்றிய கீர்த்தனை அமைப்புகளுக்கு முன்னோடி
🌷 வெண்பா, அந்தாதி, இரட்டைமணிமாலை, கட்டளைக் கலித்துறை ஆகிய பாடல் அமைப்புகளை பத்திம இலக்கியத்தில் முதன்முதலில் பயன்படுத்தியவர். கட்டளைக் கலித்துறைப் பற்றி தொல்காப்பியத்தில் செய்தியில்லை. சங்க இலக்கியங்களிலும் பாடல்கள் இல்லை. ஆகையால், இவரே இவ்வமைப்பை முதன்முதலில் பயன்படுத்தியவராகிறார்.
🌷 பதிக முறையில் முதன் முதலில் பாடியவரும் இவரே. பதிகத்தின் இறுதியில் முத்திரை பதிக்கும் முறையையும் அறிமுகப்படுத்தியவர் இவரே. இவரது திருவாலங்காட்டுத் திருப்பதிகமே மூத்த பதிகமாகிறது.

(மூலம்: காரைக்கால் அம்மையார் பாடல்கள் ஓர் ஆய்வு – முனைவர் செ சுப்புலட்சுமி மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)

oOOo

திருக்கயிலாயம் – சைவர்களும், சமணர்களும், திபெத்திய பௌத்தர்களும் மிகப்புனிதமாக கருதும் திருத்தலங்களில் ஒன்று. எண்ணற்றோர் வடக்கிருந்த தலம். பலர் வீடுபேறு அடைந்த தலம். இருப்பினும், திருக்கயிலாயம் என்பது பொதுவாக ரிஷபதேவர் 🌺🙏🏽 என்ற மாமுனிவரின் சமாதியைக் குறிக்கும்.

பேயார் சந்தித்தது ரிஷபதேவரையா அல்லது வேறு மாமுனிவரையா என்பது தெரியாது. யாராக இருந்தாலும் அப்பெருமான் “திருக்கயிலாயக் காட்சி” நிலையிலேயே இருந்துள்ளார். எனவே தான் அவரை உமையன்னையுடன் வீற்றிருந்ததாகவே குறிப்பிடுகின்றனர்.

🌷 உலகினுள் நாமிருப்பதாக பொதுவாக அனைவரும் காணும் காட்சி – உலகக்காட்சி.

🌷 நம்முள் உலகமியங்கும் காட்சி – திருக்கயிலாயக் காட்சி. காண்பவரும் உண்டு (சிவம்). காணப்படுவதும் உண்டு (உமை). பேயார் சந்தித்த பெருமான் இந்நிலையிலேயே இருந்துள்ளார்.

இப்படிப்பட்ட மாமுனிவர்கள் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற மலைத்தொடரை தன் கால்களால் கடப்பது தவறு என்றெண்ணிய பேயார் தன் தலையாலும், கைகளாலும் கடந்துள்ளார்!! இன்றுவரை மலைப்பையும் வியப்பையும் தரும் அவரது செயற்கரிய இச்செயல் கண்டு பெருமகிழ்ச்சியடைந்த பெருமான், அவரை “அம்மையே” என்றழைத்து மரியாதை செய்துள்ளார். அவரது நோக்கத்தை உணர்ந்த அப்பெருமான், அவருக்கான மெய்யாசிரியன் தானல்ல என்பதை உணர்த்தி, அவருக்கு வழிகாட்டும் நல்லாசிரியர் திருவாலங்காட்டில் இருப்பதாகக் கூறியருளி, அங்கு அனுப்பி வைத்துள்ளார்.

பேயாரும் திருவாலங்காடு வந்து சேர்ந்து, தனது மெய்யாசிரியரைக் கண்டு வணங்கி, அவர் அறிவுறுத்திய உத்தியைக் கடைபிடித்து வீடுபேறு அடைந்துள்ளார். பேயாரின் சமாதியையும், அருகிலிருந்த இன்னொரு பெருமானின் சமாதியையும் சேர்த்து இரத்தின சபையை உருவாக்கியுள்ளார் அப்போது அப்பகுதியை ஆண்ட மன்னர்.

(பேயார் சந்தித்தது திருவாலங்காட்டு மூலவரின் கீழ் சமாதியாகி இருக்கும் ஆலங்காட்டு அப்பர் 🌺🙏🏽 பெருமானையா அல்லது வேறு பெருமானையா என்று தெரியவில்லை.)

வீடுபேறு அடைய பேயார் என்ன உத்தியைக் கையாண்டார் என்பதை இரத்தின சபாபதி என்னும் திருவுருவமாக வடித்து வைத்திருக்கின்றனர் நமது பெரியோர்கள். காளியன்னைக்கு எதிராக நடனமாடிக் கொண்டே, தனது இடதுகாலைத் தூக்கி, தனது இடது காதிலிருக்கும் காதணியைக் கழட்டுவது போல் அமைந்திருக்கும் பெருமானின் திருவடிவம்.

காளியன்னை என்பது நம் உடல், உலகம் என நம்மைத் தவிர மீதமனைத்துமாகும். பெருமான் தனது காலைத் தூக்கி தனது காதணியைக் கழட்டுவது என்பது நமது கவன ஆற்றலை நம் மீதே திருப்பி, “நான் இன்னார்” என்பதிலுள்ள இன்னாரை நீக்குவதாகும். நடனமாடிக்கொண்டே கழட்டுவது என்பது நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே நமது பொய்யறிவை (இன்னார்) விட முயற்சிப்பதாகும்.

oOOo

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றிலை உந்தீபற
மார்க்கம் நேர் ஆர்க்கும் இது உந்தீபற

தன்னை உபாதி விட்டு ஓர்வது தான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம்
தான் இரண்டற்றதால் உந்தீபற
தன்மய நிட்டை ஈது உந்தீபற

— பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 (உபதேச உந்தியார்)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #70 – ஆத்தி, கடுக்கை, கொன்றை – சிறு விளக்கம்

ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்துஎழுத்தால்
சாத்தி அடியவரும் தக்கோரும் – ஏத்திப்
புகழுமலை ஆங்குஅவரைப் பொற்கொடியோடு எய்தி
மகிழுமலை அண்ணா மலை

— அண்ணாமலை வெண்பா – #70

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸 பொதுவான பொருள்:

ஆத்தி, கொன்றை போன்ற மலர்களாலும், நமசிவாய என்ற திருவைந்தெழுத்தாலும் அடியவர்களும், தகுதியுடைய ஏனையோரும் சிவப்பரம்பொருளை போற்றி வணங்குவர். அவ்வாறு போற்றி வணங்குவோரை, அவர் தம் இடத்திற்கே உமையன்னையுடன் சென்று காட்சியருளி மகிழ்வார் எம்பெருமான்.

🔸 உட்பொருள்:

🔹 ஆத்தி – இங்கு மலரைக் குறிக்கவில்லை. தொடர்பு (சம்பந்தம்) என்ற பொருளைக் குறிக்கிறது. “நான் இன்னார்” என்று நம்மை நம் உடம்புடன் தொடர்பு படுத்திக் கொள்வது.

🔹 கடுக்கை – கொன்றை மலரல்ல. சேட்டை. நமது செயல்கள். “நான் செய்கிறேன்” என்ற எண்ணம்.

🔹 ஐந்தெழுத்து – நமசிவாய.

உணர்த்தும் பொருள்: எதுவும் நானில்லை. எல்லாம் நீயே. எல்லாம் உன்னிடமிருந்து வெளிப்படுபவையே. எல்லாம் உனது வெளிப்பாடே.

இந்த வகையில் தொடர்ந்து சிந்திக்க, நமது ஆணவம் ஒழியும்.

🔹 பொற்கொடி – உமையன்னையைக் குறிக்கும். உமையன்னை என்பது நம்மைத் தவிர (நான் என்னும் தன்மையுணர்வைத் தவிர) மீதமனைத்தும் அடங்கும். ஏற்கனவே உமையன்னையோடு தான் இருக்கிறோம். இனி புதிதாக எப்படி “ஆங்கு பொற்கொடியோடு எய்த” முடியும்?

இப்போது, உலகினுள் நாமிருப்பதாக உணர்கிறோம். இது உலகக்காட்சி – பொய் காட்சி. திருக்கயிலாயக் காட்சியின் போது அனைத்தும் நம்முள்ளிருப்பதை உணர்வோம். நாமும் இருப்போம் (சிவம்). காட்சிகளும் தோன்றும் (உமை). இச்சமயத்தில் மகிழ்ச்சியும் தோன்றும் (மகிழும் மலை). யாருக்கு இந்த காட்சி கிடைக்கும்?

“நான் இன்னார்” (ஆத்தி), “நான் செய்கிறேன்” (கடுக்கை) போன்ற தவறான கண்ணோட்டங்களை விடுத்து, “எதுவும் நானில்லை. எல்லாம் நீயே.” (திருவைந்தெழுத்து) என்று சிந்தித்து ஆணவத்தை ஒழிக்கும் மெய்யன்பர்களுக்கு!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

நிர்விகற்ப சமாதி – சிறு விளக்கம்

அண்ணாமலை வெண்பா பாடல் #68ல் வரும் திருக்கடவூர் தலவரலாறு உணர்த்தும் #நிர்விகற்ப #சமாதி (*) நிலையைப் பற்றி சிறிது எழுதியுள்ளேன். ஒரு ரமண அன்பருக்காக எழுதியது. சற்று மேம்படுத்தி இந்த இடுகையாக்கியுள்ளேன். சமயவியலில் ஈடுபாடு உள்ளவர்கள் எளிதில் பரிந்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு விட்டலாச்சாரியா படம் போல் தோன்றும்! 😛

oOOo

நாமே உள்ளபொருள்!

ஆனால், பகவான் திரு ரமணர் போன்ற ஒப்பற்ற மெய்யறிவாளர்கள் 🌺🙏🏽 எத்தனை முறை விளக்கினாலும், எவ்வளவு எளிதாக விளக்கினாலும் பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை. நுண்ணறிவும், நல்ல முதிர்ச்சியும் கொண்ட ஒரு சில அன்பர்கள் மட்டுமே உடனே புரிந்துகொள்வர். மற்றவர்களுக்கு திருவருள் துணைபுரிகிறது.

தகுந்த சமயம் வரும் போது நம்முள் ஒர் ஆற்றல் திரண்டு வெளிப்படுகிறது (முதலில் திரண்டு, பின்னர் வெளிப்படும்). இந்த ஆற்றல் திரண்டு வெளிவருவதற்குள் நாம் நம்மை உணர்ந்துவிடுவோம். அது வெளிவந்தவுடன் நாம் காணும் யாவும் விலகிவிடும். காட்சிகள் விலகுவது, நாம் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழட்டப்படுவது போலிருக்கும். இப்போது எங்கும் இருள் மற்றும் பேரமைதி நிலவும். உலகக் காட்சிகளைக் காணும் போது “இருளைக் காண்கிறோம்”, “அமைதியாக உணர்கிறோம்” என்ற உணர்வுகள் இருக்கும். ஆனால், இப்போது, எல்லாம் நமக்குள் இருப்பதை உணர்வோம். “காண்கிறோம்”, “உணர்கிறோம்” என்பது போய் “இருக்கிறோம்” என்ற உணர்வுமாத்திரமாக இருப்போம் (“இருளாய் இருக்கிறோம்”, “அமைதியாய் இருக்கிறோம்”).

இத்தனையும் ஓரிரு நொடிகளில் நடந்துவிடும். இவை நடந்து கொண்டிருக்கையில் நம்முள் பின்வரும் வரிசையில் உணர்வுகள் தோன்றும்:

– முதலில், சிறு வியப்பு
– பின்னர், பெரும் மகிழ்ச்சி
– இறுதியில், பேரமைதி!!

நாம் இது நாள் வரை தேடிய பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும். பகவான் அருளிய பல அறிவுரைகளின் உட்பொருள் புரிந்துவிடும். இந்நிலையைத்தான் “நிர்விகற்ப சமாதி” என்று எனது இடுகைகளில் குறிப்பிடுகிறேன்.

நமது வினைத்தொகுதி தீர்ந்து போயிருந்தால் இப்படியே இருந்துவிடுவோம். இல்லையெனில், அன்னை மாயை மீண்டும் தனது வேலையைத் தொடங்குவார். இன்னதென்று புரியாத கொடுமையான உருவங்கள் தோன்றும். அச்சப்படாமல் இருந்தோமானால், அடுத்து காமத்தைப் பயன்படுத்துவார்.

எடுத்துக்காட்டு: தாங்கள் பகவானது தீவிர அன்பர் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், வேறொரு பெருமானது அறிவுரையைப் படித்துக்கொண்டிருக்கும் போது மேற்கண்ட நிலையை அடைந்துவிடுகிறீர். தங்களை வெளிக்கொணர அன்னை இப்படியொரு எண்ணத்தை தோற்றுவிப்பார்: இந்நிலையை பகவானது அறிவுரையால் அல்லவா அடைந்திருக்க வேண்டும்? வேறொருவரால் அல்லவா அடைந்திருக்கிறோம்! இது பகவானது புகழுக்கு இழுக்கல்லவா?

இப்போது, தாங்களும் சிரித்துக்கொண்டே (சிரிப்பதற்கு உடல் இல்லை. சிரிப்பு என்ற உணர்வுடன்.) அன்னையுடன் உடன்பட்டு வெளிவருவீர். (சிரிப்பதற்கு காரணம் – சிறு பிள்ளைத்தனமான அன்னையின் நோக்கத்தை (லீலையை) தாங்கள் புரிந்துகொண்டதால்)

வெளிவந்த பின்…. உலகத்திற்குள் நாமிருப்போம்!! பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம்.

இந்த துய்ப்பின் மூலம்:

– நாம் யாரென்று உணர்ந்து கொண்டோம்
– மனம், மாயை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டோம்
– இதுவரை புரியாமலிருந்த எத்தனையோ செய்திகள் புரிந்துவிடும். இனி எழும் கேள்விகளுக்கும் விடை காணமுடியும்.

மேற்கொண்டு பயணிக்க, சகஜ நிலையை அடைய, இவை பெரும் உதவியாக இருக்கும். திருவருளும் பகவானது அறிவுரைகள் வழியாக துணைபுரியும்.

oOOo

இனி, புகழ்பெற்ற சில உருவகங்களையும், உருவகக்கதைகளையும் மேற்கண்ட துய்ப்பை வைத்துப் பார்ப்போம்.

🌷 திருக்கடவூர் தலவரலாறு – நம்முள்ளிருந்து ஆற்றல் வெளிப்பட்டதை சிவஅடையாளத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டதாகவும், இதன் விளைவாக மரணபயம் (எமபயம்) நீங்குவதை எமனை உதைத்ததாகவும் உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

🌷 சிங்கப்பெருமாள் திருவிறக்கம் – திருக்கடவூர் தலவரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டக் கதை. சிவஅடையாளத்தை தூணாகவும், சிவபெருமானை சிங்கப்பெருமாளாகவும் மாற்றியிருப்பர். அங்கு “மரணபயம் நீங்கியது” என்பதை இங்கு “ஆணவம் நீங்கியது” (இரண்யகசிபுவின் இறப்பு) என்று மாற்றியிருப்பர்.

🌷 முருகப்பெருமான் பிறப்பு – நம்முள் திரண்ட ஆற்றலே கந்தன் (திரண்டவன்) எனப்படும். இந்த ஆற்றல் திரளும்போதுதான் நம்மை நாம் உணர்கிறோம். எனவேதான் இவர் சுவாமிநாதன், சிவகுருநாதன், தந்தைக்கு மந்திரம் சொன்னவர் என்று போற்றப்படுகிறார். இவர் முழுவதும் வெளிவருவதற்குள்ளேயே இவரது பணி முடிந்துவிடுவதால் இவர் சிவக்குமாரன் – அன்னையின் தொடர்பில்லாமல் பிறந்தவர் – என்றழைக்கப்படுகிறார்.

🌷 ஆற்றல் வெளிப்பட்டு உலகக்காட்சி நீங்குவது என்பது ஆபரணங்கள் கழட்டப்படுவது போலிருக்கும். இதை வைத்தே “பெருமாள் அலங்காரப்பிரியர்” என்று அருளியிருக்கிறார் திரு சட்டைமுனி சித்தர் 🌺🙏🏽 (திருவரங்கப் பெருமாள்).

🌷 சமாதியை விட்டு நம்மை வெளிக்கொணர இன்னதென்று சொல்லமுடியாத கொடுமையான உருவங்களைத் தோற்றுவித்த மாயை தான் காளியன்னை, கொற்றவை (துர்கை – கோட்டையைக் காப்பவர்) எனப்படுகிறார். (அழிக்கவே முடியாத பரம்பொருளையும் எதிர்ப்பவர் என்பதால் தான் சோழர்கள் இவரை தமது காவல் தெய்வமாக, போர் தெய்வமாகக் கொண்டிருந்தனர்)

🌷 காளியன்னையிடம் தப்பித்த பின், காமத்தைக் கொடுத்து நம்மை கவிழ்த்த மாயையே சிவகாமி எனப்படுகிறார். வைணவத்தில் இவர் வெண்ணெய் திருடிய கண்ணனாகிறார்.

oOOo

உலகக் காட்சிகளைத் தோற்றுவிக்கும் அன்னைக்கு உலகையும் நடத்த முடியாதா? ஏன் சிவபரம்பொருளை வெளிக்கொணர முயற்சிக்கிறார்? இதனால் தான் சிவமே உயர்ந்தது எனப்படுகிறது. பெண்தெய்வ வழிபாடும், அதிலிருந்து தோன்றிய வைணவமும் அடிப்பட்டுப் போவது இங்கு தான்.

oOOo

இணைப்புப்படம்: பாதாள லிங்கம், அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை. இந்த சிவஅடையாளத்தின் பின்னே பகவான் சில காலம் அசைவற்று அமர்ந்திருந்தார். இதை திரு சேஷாத்திரி சுவாமிகள் 🌺🙏🏽 உணர்ந்து வெளியே சொன்னதால் பகவான் நமக்கு கிடைத்தார். இல்லையெனில், பகவானது உடல் பூச்சிகளுக்கு இரையாகியிருக்கும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

* – மோட்சம், சமாதி போன்ற ஆரியச் சொற்களுக்கு தமிழில் வீடுபேறு, நிலைபேறு என்ற அருமையான சொற்கள் உள்ளன. ஆனால், நிர்விகற்ப, சவிகற்ப, சகஜ சமாதிகளை நம் நிறைமொழியில் எவ்வாறு வழங்குவது என்று எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து இவ்விடுகையின் கருத்துப்பகுதியில் பதிவிடவேண்டுகிறேன்.

உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும் தாயாகிய சைவத்தை சமயமாகவும், உலகிலுள்ள மொழிகளின் தந்தையாகிய தமிழை மொழியாகவும் (வள்ளற்பெருமானின் 🌺🙏🏽 வாக்கு) கொண்ட நமக்கு நமது சொற்கள் தெரியவில்லை!! 😔 நம் இனத்தை நம் இனமே இன்று வரை ஆண்டிருந்தால், பராமரித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

உலகெங்கும் காணப்படும் நம் அடையாளங்கள்!!

“தமிழர் நாட்டுப்புற இயல் களஞ்சியம்” என்ற நூலில் பேரா. இ பாலசுந்தரம் அவர்கள் எழுதுகிறார்:

ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளின் வழிபடப்பட்ட பெண் தெய்வங்கள் தமிழர் வழிபட்ட பெண் தெய்வ உருவங்களையும் பண்புகளையும் கொண்டிருந்தமையையும் மானிடவியலாளர் விளக்கியுள்ளனர். மத்தியத்தரைக் கடற்பிரதேசங்களிற், குறிப்பாக ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில், வழிபடப்பட்ட பெண் தெய்வங்கள் தமிழரது நாக கன்னியர் வழிபாட்டை ஒத்துள்ளன எனக் கூறப்படுகின்றது. ரூசிய நாட்டில் உக்கிரேயின் பகுதியில் கி.மு. 4000-2000 இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த பல்வேறு பெண் தெய்வ உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரியாவில் வீயன்னா நகரில் புதைபொருளாய்விற் கண்டெடுக்கப்பட்ட பெண் தெய்வ உருவங்கள் காளியம்மன், இலட்சுமி ஆகிய தெய்வங்களின் உருவங்களை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.

oOOo

உலகெங்கும் சென்று வந்தவர் நாம். உலகெங்கும் அறியப்பட்டிருந்த மொழி நம் நிறைமொழி. உலகெங்கும் கடைபிடிக்கப்பட்ட சமயநெறி நமது சமயநெறி. கடந்த 800 ஆண்டுகளாக வலுவான நிலையான தமிழரசுகள் தோன்றாமல் போனதால் எவ்வளவோ இழந்துவிட்டோம். இன்றும் சரியான தலைமை இல்லாததால், தேசிய ஒற்றுமை என்ற போர்வையில் மீதமிருப்பதையும் அழிக்கத்துடிக்கிறது ஒரு கூட்டம்! புளுத்தறிவு, சமூக அநீதி, மதச்சார்பின்மை போன்ற பட்டைநாமம், காதுகுத்துகள் மூலம் சமூக கட்டமைப்பை சீரழித்துவிட்டது இன்னொரு கூட்டம்!!

காலம் இப்படியே போய்விடாது. நல்லது நடக்கும். என்றும் வாய்மையே வெல்லும்.

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #69 – திருக்கயிலாயக் காட்சி – சிறு விளக்கம்

இமையவரும் பத்தரும்மா கேசுரரும் காணச்
சமயகுரு வாம்நந்தி தாங்க – உமைஒருபங்கு
ஆனமலை வாக்குமனம் காயம் தமக்குஅரிய
வானமலை அண்ணா மலை

— #அண்ணாமலை #வெண்பா – #69

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸 இமையவரும் … ஆனமலை

வானவரும், அன்பர்களும், மாமுனிவர்களும் காண, (சைவ) சமயத்தின் முதல் மெய்யாசிரியரான நந்தியம்பெருமான் (விடை) தாங்க, உமையன்னையோடு காட்சித் தருகிறாராம் சிவபெருமான். அதாவது, உலகக் காட்சியைப் புனைகிறார் ஆசிரியர்.

🔹 சிவம், அன்னை & விடை – உலகக்காட்சி

🔹 சிவம் & அன்னை – திருக்கயிலாயக் காட்சி. சில திருத்தலங்களில். “இன்னாருக்கு இறைவன் திருக்கயிலாயக் காட்சி கொடுத்த இடம்” என்று எழுதி, அம்மையப்பரை வரைந்திருப்பார்கள் / செதுக்கியிருப்பார்கள். அவ்விடங்களில், அந்த அருளாளர்கள் தாமே தாமாயிருக்க, படைப்பனைத்தும் தம்முள்ளிருக்க “இரு”ந்திருப்பார்கள்.

🔹 சிவம் – நிர்விகற்பசமாதி நிலை

வேடிக்கையாக 😊,

🔹 நாயைக் கண்டால் கல்லைக் காணோம் – உலகக் காட்சி

🔹 கல்லைக் கண்டால் நாயைக் காணோம் – சமாதி

🔹 இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம் – திருக்கயிலாயக் காட்சி. அடிப்பவன் – விடை/மனம்.

🔸 வாக்குமனம் காயம் தமக்குஅரிய வானமலை

உள்ளபொருளுக்கு வாக்கு, மனம் & காயம் ஆகியவை கிடையாது என்று பாடுகிறார் ஆசிரியர்.

வானமலை – உயிர் மலை. வானம் (விசும்பு) என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தாலும் உயிர் என்ற பொருளிலேயே இங்கு பயன்படுத்தியுள்ளார். விசும்பிற்கு எல்லை கிடையாது. ஒரு பொருளைத் தொடுவதுபோல் விசும்பைத் தொடமுடியாது. அதை ஒளிச்சிதறல் கொண்டே காண/உணரமுடியும். இவ்வாறே உள்ளபொருளும். படைப்பை வைத்தே படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று உணரமுடியும்.

அந்த படைப்பும் எதைக் கொண்டு படைக்கப்பட்டது? (இந்த கேள்விக்கு பாலைவன மதங்கள் ‘ஙே’ என்று முழிக்கும்! 😁) விடை கூறுகிறார் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽:

… நாமஉரு
சித்திரமும் பார்ப்பானும் சேர்படமும் ஆர்ஒளியும்
அத்தனையும் தானாம் அவன்!!

(ஆர்ஒளி – அறிவு ஒளி)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

அண்ணாமலை வெண்பா,
குருநமச்சிவாயர்,
பகவான் ரமணர்,
திருக்கயிலாயக்காட்சி,
நாயைக் கண்டால்

தமிழரின் உறவுமுறை இரோகுவோயிஸ் முறையைச் சார்ந்ததாம்!! 😛

ஐசக் நியூட்டன் என்ற பரங்கி 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவரே புவியீர்ப்பு விசையைக் “கண்டுபிடித்தவர்” (!?). நாம் வாழும் புவியும், ஏனைய கோள்களும் பகலவனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதும், நம் புவி தன் மீதுள்ள பொருட்களை தன்னிடமே வைத்திருப்பதும் ஒரு ஈர்ப்பு விசையால் தான். இந்த ஈர்ப்பு விசை நியூட்டன் “கண்டுபிடித்த” ஈர்ப்பு விசையைச் சார்ந்ததே!! 😁 விண்ணிலுள்ள ஏனைய கோள்களும், விண்மீன் குடும்பங்களும் “இவரது” ஈர்ப்புவிசையைக் கொண்டே சுற்றி வருகின்றன!!! 😜

😂😂😂😂🤣

நம் இனம் உலகின் மூத்த இனமாகும். கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும், மேற்கே தென் அமெரிக்கா வரையிலும் என்றோ ஆமைவழிப்பாதையில் திரைகடலோடிய இனம் நம் இனம். நிறைமொழியில் பேசும் இனம். உலக மதங்களின் தாயாகிய சைவத்தை சமயமாகக் கொண்ட இனம். அன்னை என்ற உறவு முறைக்கு நாம் வைத்த “அம்மா” என்ற சொல் தான் உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மருவி வழங்கப்படுகின்றது. இவ்வளவு பெருமைகளைக் கொண்ட நம் இனத்தின் உறவுமுறை, 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரோகுவோயிஸ் என்ற பரங்கி “ஆராய்ந்தறிந்த” உறவுமுறையைச் சார்ந்ததாம்!!

எப்படியிருக்கிறது விக்கிப்பீடியா-வில் கிடைக்கும் இந்த பிட் / ஊழியம்? யாருடையது யாரைச் சார்ந்தது?

ஒரு தலைமுறைக்கு முன்னாள் வரை இத்தகைய பிட்டுகளைத் தயாரிக்கும் ஊழியத்தைச் செய்தது பான்பராக் சட்டைகள். இன்று, மக்கள்தொகை பெருக்கத்தாலும், மெக்காலே கல்வியின் வளர்ச்சியாலும் பிட் தயாரிப்பு ஊழியத்தை பான்பராக் சட்டைகள் மட்டுமல்லாது பாவாடைகளும், கூவஞ்சட்டைகளும் செய்கின்றன.

ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை இந்த பிட் தயாரிப்பு ஊழியத்திற்கு பொரை வீசுவது தசமபாகம் பெறும் பாவாடை தொழிற்கூடங்களும், உலகக்கொல்லிகளான வெள்ளையர்களும் தான்.

பாரம்பரிய ஊடங்களை தன் கையில் வைத்திருக்கும் இந்த கூட்டம் இப்போது விக்கிப்பீடியா போன்ற இணைய நிறுவனங்களையும் முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டன.

oOOo

கெப்ளர், நியூட்டன், எடிசன் என பெரும்பாலான பரங்கிகளும் திருட்டுப்பயல்கள் தாம். மற்றவருடைய, குறிப்பாக நம் முன்னோர்களின், கண்டுபிடிப்பை தமதாக்கிக் கொண்டவர்கள்.

வெள்ளையன் = உலகக் கொள்ளையன், நயவஞ்சகன், நச்சு உயிரி, திமிர் பிடித்தவன், ஆணவம் கொண்டவன். ஐம்பூதங்களையும் மாசுபடுத்தியவன். இவன் நுழைந்த துறை உருப்படாது. இவனது மொழி, மதம், கலாச்சாரம் என அனைத்தும் தூக்கி எறியப்பட வேண்டியவை. இவனது அறிவியல் அழிவியல் என்றழைக்கப்பட வேண்டும்.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #68 – திருக்கடவூர் தல வரலாறு – சிறு விளக்கம்

கதித்தமுனி பாலகன்மார்க் கண்டனையே சீறிப்
பதைத்துவரும் காலன் படவே – உதைத்தஒரு
வீரமலை சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச
வாரமலை அண்ணா மலை

— #அண்ணாமலை #வெண்பா – #68

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸கதித்தமுனி … வீரமலை

சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான திருக்கடவூர் தலவரலாற்றைப் பாடுகிறார் ஆசிரியர். அதாவது, திரு மார்க்கண்டேய மாமுனிவரைக் 🌺🙏🏽 கவர வந்த காலனை, இறைவன் தனது காலால் உதைத்த வரலாறு.

வீரட்டத்தலங்கள் – இத்தலங்களில் சமாதியடைந்திருக்கும் பெருமான்கள் கண்டுணர்ந்து தெரிவித்த பேருண்மைகள் / உத்திகள், ஆன்மிக உலகில் பெரும் தாக்கத்தை / மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். எனவேதான் “வீரட்டானம்” என்ற சிறப்பு பெயரால் அழைக்கின்றனர்.

திருக்கடவூர் – மார்க்கண்டேய மாமுனிவரின் சமாதி திருத்தலம். இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளம்தான் மூலவர் அமுதுடல் கொண்ட அண்ணல் (அமிர்தகடேசுவரர்). இவர் மெய்யறிவு பெறும் போது இவருக்குள் நடந்தவைதான் திருக்கடவூர் தலவரலாறாகியிருக்கிறது. இவர் கண்டுணர்ந்து தெரிவித்தவை தான் திரு சிங்கப்பெருமாள் திருவிறக்கம் மற்றும் திரு முருகப்பெருமான் பிறப்புக் கதைகளுக்கு அடிப்படையாகும்.

நாம் காணும் யாவையும் நம்முள்ளிருந்து உதிப்பவை. வெறும் தோற்றமாத்திரம் தான். நாமே உள்ளபொருள். இதை நாம் உணரமுடிவதில்லை. பல காலம் வடக்கிருந்து பக்குவமடைந்த பின், ஒரு சமயம், நம்முள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு நாம் காணும் காட்சிகளை நீக்கிவிடும். அது வெளிப்படும் போதே நாம் யாரென்று உணரத் தொடங்கிவிடுவோம். காட்சிகள் நீங்கிய பிறகு இன்னமும் தெளிவாக உணர்ந்துவிடுவோம். இந்நிகழ்வே மெய்யறிவு பெறுதல் எனப்படும். இதனால் ஏற்படும் உடனடி விளைவு: சாவைப் பற்றிய அச்சம் நீங்குதல்!

பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 தனது 16 வயதில், மதுரையிலுள்ள தனது சித்தப்பபாவின் வீட்டில் மெய்யறிவு பெற்றார். “இதன் பின்னர் என்ன நடந்தது?” என்று ஒரு அன்பர் பின்னொரு நாள் கேட்டபோது பகவான் கொடுத்த பதில்: அத்தோடு மரணபயம் என்னைவிட்டு விலகிற்று!!

நம்முள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு, காட்சிகளை நீக்கி, நாம் யாரென்று நமக்கு உணர்த்தி, சாவைப் பற்றிய அச்சத்தை போக்குவதைத்தான் “சிவலிங்கத்திலிருந்து பெருமான் வெளிப்பட்டு காலனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருளினார்” என்று உருவகப்படுத்தியுள்ளனர்.

காலனை உதைத்தல் = சாவைப் பற்றிய அச்சம் நீங்குதல் = மெய்யறிவு பெறுதல்!!

மரணபயம் மிக்கு உள அம் மக்கள் அரணாக
மரண பவம் இல்லா மகேசன் — சரணமே
சார்வர்; தம் சார்வொடு தாம் சாவு உற்றார்; சாவெண்ணம்
சார்வரோ சாவாதவர் நித்தர்

— உள்ளது நாற்பது

🔸சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச வாரமலை

இறைவன், தனது மெய்யாசிரியர் குகைநமச்சிவாயர் 🌺🙏🏽 வடிவில் வந்து, தன்னை அன்பாக ஆட்கொண்டதைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர்.

(பட்சம் – அன்பு. “ஒரு பக்கமாக” என்றும் பொருளுண்டு. எனில், “இறைவன் தன் மீது மட்டும் அதிக கருணைக் கொண்டதாகப்” பாடுகிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.)

வாரமலை – சரிவான மலை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

ஆடி மாதம் அம்மனுக்கான மாதமாகியதற்கான காரணங்கள்

ஆடி மாதத்தில், சிவபெருமானின் ஆற்றலைவிட, உமையன்னையின் ஆற்றல் சிறந்திருக்குமாம்!! 😂

மேலும், இம்மாதத்தில், பெருமான் அன்னைக்குள் அடங்கிவிடுவதாக தொன்நம்பிக்கையாம்!!! 🤣

மெக்காலே/பகுத்தறிவுக் கல்வி படுத்தும் பாடு இருக்கிறதே…

எல்லாத்துறைகளிலும் பணியாளர்களின் தரம் குறைந்து கொண்டே போகும் போது இத்துறை மட்டும் விதிவிலக்காகுமா?

oOOo

ஆடி மாதத்தில் பெண்தெய்வங்களைப் போற்றுவதற்கான காரணங்கள்:

🌷 மாதங்களின் வரிசையில் ஆடி மாதம் நான்காவதாகும். சோதிடத்தில் நான்காமிடம் அன்னை மற்றும் நிலம் & வீடு போன்ற அசையா சொத்துக்களைக் குறிக்கும் (இன்னும் பலவற்றையும் குறிக்கும்). நிலத்தைப் பெண்ணாக, பெண்தெய்வமாக கருதுவது மரபு. எனவே, இம்மாதத்தில் பெண்தெய்வங்களைப் போற்றியுள்ளனர்.

🌷 “ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற பழமொழி இம்மாதத்திற்கும் உழவுக்கும் இருக்கும் தொடர்பைக் காட்டும். அக்காலத்தில், உழவுப் பணிகளைத் தொடங்கும் முன் ஊர் காவல்தெய்வங்களுக்கு, குறிப்பாக மாரியம்மன் போன்ற பெண்தெய்வங்களுக்கு, விழா எடுத்துவிட்டுப் பணிகளைத் தொடங்கியிருக்கலாம். (மாரியம்மன் – மாரி + அம்மன். மாரி = மழை. மாரியம்மன் = மழையம்மன்.)

🌷 தை மாதம் அறுவடை காலம். சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பணப்புழக்கம் இருக்கும் காலம். ஆடி மாதம் வறட்சிக்குப் பின் வரும். கையிருப்பு தீர்ந்து/குறைந்து போயிருக்கும் காலம். இதனால், மக்கள் மனதில் பயம், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் அதிகரிக்கும். இந்த விளைவுகளைத் தடுக்கவும், இருக்கும் கையிருப்பைச் சுற்றி வர வைக்கவும் இம்மாதத்தை திருவிழா மாதமாக மாற்றியுள்ளனர்.

வயிறு பசித்துக்கொண்டிருக்கும் போது மெய்யறிவைப் பற்றி எடுத்துக்கூறமுடியாது. எனவேதான் அன்னையைப் போற்ற வைத்துள்ளனர் (சிவம் – உயிர், அன்னை – உடல்/பொருள்).

🌷 இம்மாதத்தில் கணவனும் மனைவியும் இணைந்தால் அடுத்து வரும் கோடை காலத்தில் மகப்பேறு அமைய வாய்ப்புள்ளது. இது எல்லோருக்கும் தொல்லையாக அமையும். அவர்களை இணையவிடாமல் தடுத்து, மனதை இறைவழிபாட்டின் பக்கம் திருப்பிவிடவும் இந்த திருவிழாக்களைப் பயன்படுத்துகின்றனர்.

oOOo

உள்ளபொருள் (பரம்பொருள் / மெய்பொருள்) என்பது ஒன்று தான். இதுவே அனைத்துமாகியிருக்கிறது. இறைநம்பிக்கை இவ்வாறு இருந்த வரை எந்த சச்சரவும் இருந்திருக்காது. பின்னர், பல படையெடுப்புகளால் நம்மவர்களின் தரம் குறையத் தொடங்கியது. பிரிவுகளின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது.

🌷 சிவம் என்பது திரைக்கு சமம். அன்னை என்பது அத்திரையில் தோன்றும் காட்சிகளுக்கு சமம்.

🌷 சிவம் என்பது நீருக்கு சமம். அன்னை என்பது அந்நீரில் தோன்றும் காட்சிகளுக்கு சமம்.

🌷 சிவம் – அசைவற்றது. அன்னை – அசைவது.

சிவத்தின் ஆற்றலாக அன்னையைக் காணவேண்டுமே தவிர “சிவத்தின் ஆற்றலைவிட அன்னையின் ஆற்றல் சிறந்திருக்கும்” என்பதெல்லாம் பொருந்தாது. இது போன்றே, சிவத்திற்குள் தான் அன்னையே அன்றி அன்னைக்குள் சிவம் என்பதும் பொருந்தாது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮