வாசுகிப் பாம்புக்கு போதாத நேரம்! 😃

வாசுகியின் படிமம் கிடைத்துள்ளதெனில், அது இங்கு வந்து, வாழ்ந்து & இறந்துவிட்டது என்பது உறுதியாகிறது. எனில், அச்சமயத்தில் சிவபெருமானின் கழுத்தை யார் அணி செய்தார்கள்? வாசுகியின் பாடி-டபுளா? அல்லது, உடன் பிறந்த ஆதிசேஷனே பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் ஓவர்டைம் பார்த்தாரா? 😆

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

திருட்டுப்பயல்களே!! இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள்?

🌷 வாசுகி – மனம் / மூச்சுக்காற்று

🌷 சிவபெருமானின் கழுத்தை அணி செய்யும்போது – மனம்

🌷 மந்தார மலையை கடையும் போது – மூச்சுக்காற்று

இனி, மந்தார மலையை கடைதலின் உட்பொருளை பார்ப்போம்:

🌷 பாற்கடல் – நமதுடல் / வையகம். மாறிக்கொண்டேயிருப்பதை குறிக்கும்.

🌷 மந்தாரமலை – பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து பெறப்படும் அறிவுரை.

🌷 மலையை தாங்கும் ஆமை – புலனடக்கம்

🌷 தேவர்கள் – நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி

🌷 அசுரர்கள் – நாம் வெளிவிடும் கரியமிலம்

🌷 கடைதல் – மெய்யாசிரியரிடமிருந்து பெறப்பட்ட அறிவுரையை செயல்படுத்துதல்.

🌷 முதலில் வெளிப்படும் நஞ்சு (தவ்வை / மூத்தவள் / மூதேவி) – அவரவர் வினைப்பயன்களின் படி வெளிவரும் எண்ணங்கள், அரிய அறிவு & திறமைகள். அசுரத்தில், சித்திகள்.

🌷 இறுதியில் வெளிப்படும் அமுது (மலர்மகள் / இளையவள் / ஶ்ரீதேவி) – நாமே உள்ளபொருள் என்ற மெய்யறிவு.

மொத்தத்தில், இக்கடைதல் நிகழ்வு வடக்கிருந்து, மெய்யறிவு பெறுதலை குறிக்கும்.

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Leave a comment