பழநி திருப்புகழ் 🌸🙏

சில நாட்களுக்கு முன் #சென்னை #பெசண்ட்நகர் #அறுபடை #முருகன் கோயிலுக்குச் சென்றிருந்த போது, அங்கிருக்கும் #பழநியாண்டவர் திருக்கோயிலில் செதுக்கப்பட்டிருந்த பின் வரும் #திருப்புகழ் பாடல் என் கருத்தை கவர்ந்தது. அதிலும், இறுதி 2 அடிகள் என்னை சில நாட்களாகவே சிந்திக்க வைத்தது! இதோ அந்த பாடல்…

வசன மிக ஏற்றி மறவாதே
மனது துயர் ஆற்றில் உழலாதே
இசை பயில் சடாட்சரம் அதாலே
இகபர சௌபாக்யம் அருள்வாயே
பசுபதி சிவாக்யம் உணர்வோனே
பழநிமலை வீற்றருளும் வேலா
அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர் சிறை மீட்ட பெருமாளே 🌸🙏

(நான் திருப்புகழிலோ தமிழிலோ புலமை பெற்றவனல்ல. இந்தப் பாடலைக் கண்டதும் என் உள்ளுணர்வில் எழுந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த இடுகையை எழுதியுள்ளேன். 🙏)

🌼 வசன மிக ஏற்றி மறவாதே

“அளவுக்கு மீறி நூல்களை படிப்பதால் ஒரு பயனும் இல்லை. நான் என்பது உடலுக்குள் இருப்பது. புத்தகத்தில் அல்ல.” என்பது பகவான் ஸ்ரீரமணரின் 🌸🙏 வாக்கு. அதாவது, நமக்குள் தேட வேண்டிய ஒன்றை நூல்களுக்குள்ளாகவே தேடிக் கொண்டிருந்தால் ஒரு பயனுமில்லை என்கிறார் பகவான். உள்ளங்கை நெல்லிக்கனி போலுள்ள இறையுணர்வை விளக்குகிறேன் பேர்வழி என்று வண்டி வண்டியாய் எழுதித் தள்ளியிருப்பார்கள். அல்லது, மணிக்கணக்கில் பேசி நுங்கம்பாக்கம் போக வேண்டிய விவேக் திருப்பதி போய் சேர்ந்தது போல் நம்மை எங்காவது கொண்டு போய் சேர்த்து விடுவார்கள்! 😁

🌼 மனது துயர் ஆற்றில் உழலாதே

மனமென்பது துயரமான ஆறு மட்டுமல்ல. வற்றாததும் கூட. இதனுடைய மூலத்தை தேடினாலன்றி இதிலிருந்து கரையேற முடியாது. எண்ணங்களின் குவியலே மனம் என்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர். “நான் இவ்வுடல்” என்ற தவறான எண்ணமே அனைத்திற்கும் மூல காரணம். இந்த “நான் என்பது என்ன?” அல்லது இந்த “நான் என்பது எங்கிருந்து தோன்றுகிறது?” என்று ஆராய்ந்தால் மட்டுமே இது அடங்கும். இந்த கருத்தை திருத்தல வரலாறுகளிலும், புராணக் கதைகளிலும் மற்றும் சிலை வடிவங்களிலும் வெகு அழகாக பதிவு செய்து வைத்திக்கிறார்கள் நம் முன்னோர்கள். இப்படிப்பட்ட ஒரு சிலை தான் கோவையருகில் உள்ள திரு #அவிநாசியப்பர் 🌸🙏 திருத்தலத்தில் உள்ளது:

கூத்தப்பெருமானுக்கும் காளியம்மைக்கும் நடந்த போட்டி நடனம் பற்றி படித்திருப்போம். எந்த வித நடனத்தினாலும் அம்மையை வெல்ல முடியாமல் போகவே, இறுதியாக, பெருமான் தனது காலை உயர்த்தி தனது காதணி ஒன்றை கழற்றிக் காட்டுவார். அம்மையால் இதைச் செய்ய முடியாமல் போகவே, தோல்வியை ஒப்புக்கொண்டு அமைதியாகிவிடுவார். இக்கதையில் வரும் காளியம்மை தான் மனம், மாயை எல்லாம். பெருமான் மெய்யறிவு பெற முயலும் சீவன். பல வித நடனங்கள் என்பது பக்தி, யோகம், ஜெபம், தியானம் போன்ற பல வித தவ முயற்சிகள். தனது காலை உயர்த்தி தனது காதணியை கழட்டுவது என்பது வெளிமுகமாகவே சென்று கொண்டிருந்த கவன ஆற்றலை தன் மீதே திருப்பி தனது மூலத்தில் ஒடுங்குதல் – “நான் இன்னார்” என்பதிலுள்ள இன்னாரை இழத்தல் (கழட்டுதல்) – “நான் நானே” என்ற தனது உண்மையை உணர்தல். உண்மையை உணர்ந்த சீவன் சிவமாகிறது. இத்தோடு மாயையின் மாயாஜாலங்கள் உண்மைத் தன்மையை இழந்து கானல்நீர் காட்சிகள் போன்றாகி விடுகிறது.

எப்பேர்பட்ட பேருண்மையை எவ்வளவு அழகாக உவமையாக்கி, எவ்வளவு அருமையாக சிலையாக செதுக்கியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!! 😍🙏 (ஐயன் செதுக்கப்பட்டிருக்கும் தூணுக்கு எதிர் தூணில் அம்மையையும் அழகுடன் செதுக்கியிருந்தார்கள். படம் பிடிப்பதற்குள் பூசாரி வந்து தடுத்துவிட்டார். படம் பிடித்தால் இறையாற்றல் போய்விடுமாம்! 😀 தூணில் தான் இறையாற்றல் இருக்கும் போலிருக்கிறது. 😁 மேலும், இறையாற்றலை விட எனது படக்கருவி ஆற்றல் மிகுந்தது போலிருக்கிறது!! 😂)

🌼 இசை பயில் சடாட்சரம் அதாலே

சடாட்சரம் எனில் #ஆறெழுத்து – #சரவணபவ. எனில், நாணல்காட்டில் பிறந்தவர் (பிறந்தது). நாணல்காடு என்றால் எது? அதில் பிறப்பது எது? துன்பங்கள் நிறைந்த உலகமும், அதற்கு உதவிடும் மனமும் தான் நாணல்காடு. இத்துன்ப உலகில் சொல்லொண்ணா அல்லல்பட்டு, சரியான பக்குவம் அடைந்த பின் தெளிந்த, திரண்ட, கூர்மையான ஒரு அறிவு பிறக்கும். அனைத்திற்கும் காரணமான “நான் இன்னார்” என்ற பொய்யறிவை துளைத்து பிளக்கும். இந்த அறிவு தான் நாணல்காட்டில் பிறந்த கந்தவேல்!! 🌸🙏

இந்த கந்தவேலைப் பற்றிய சிந்தனை, பின்னணி இசை போன்று தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் செய்யவேண்டும். #அருணகிரிநாதர் 🌸🙏 “இசை பயில்” என்று 2 சொற்களில் வெளியிட்ட உத்தியை, பகவான் ஸ்ரீரமணர் “விட்டுக் கருதலின் ஆறுநெய் வீழ்ச்சி போல் விட்டிடாது உன்னலே” என்று 8 சொற்களாக விரித்து அருளியிருக்கிறார் (உலகின் பொய்த்தன்மையை, தன்மையின் உண்மைத்தன்மையை பற்றி அவ்வப்போது சிந்திக்காமல், ஆற்றின் ஓட்டம் போல், உருக்கிய நெய்யை ஊற்றுவது போல் தொடர்ச்சியாக சிந்திக்கவேண்டும்).

🌼 இகபர சௌபாக்யம் அருள்வாயே

மேற்சொன்ன 3 வரிகளை தனித்தனியாகவும் பொருள் கொள்ளலாம் (மறவாதே, உழலாதே, இசை பயில்). அல்லது, மூன்றையும் இணைத்தும் பொருள் கொள்ளலாம் (மறவாமல், உழலாமல், இசை போல் பயின்றால்). இப்படி பொருள் கொண்டால், இவற்றால் கிடைக்கும் பலன்களை 4வது வரியில் வெளியிடுகிறார் அருணகிரியார் – இக & பர சௌபாக்யம். சௌபாக்யம் எனில் நற்பேறு. பர வாழ்க்கையில் நற்பேறு எனில்… பர வாழ்க்கையே நற்பேறு தான்! இறையோடு இரண்டற கலத்தலே அந்த நற்பேறு. இக வாழ்க்கையில் நற்பேறு எனில் பெயர், புகழ், பொருள், வசதிகள் போன்றவை இல்லை. பர வாழ்க்கையைப் பெற்றுத் தரக்கூடிய ஞானம், கல்வி, தானம் மற்றும் தவம் என்று ஒளவைப்பாட்டி “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” பாடலில் பட்டியலிட்டவையாகும் (#1).

இந்த இகபர நற்பேறுகளை வழங்குவதற்கு ஒருவர் / ஒன்று இருந்ததாகவேண்டும் (வினைகள் தாமே பலன் தரா என்றும், பலன்களை வழங்குபவர் இறைவன் என்றும் பகவான் ஸ்ரீரமணர் தமது உபதேச உந்தியாரில் பதிவிட்டிருக்கிறார் (“கன்மம் பயன் தரல் கர்த்தனது ஆணையால்…”)). அவரைப் / அதைப் பற்றி அடுத்த 4 வரிகளில் பாடுகிறார்.

🌼 பசுபதி சிவாக்யம் உணர்வோனே

சீவன் (பசு) சிவனுள் (பதி) ஐக்கியமாகும் சிவ-ஐக்கியத்தை உணர்ந்தவனே. சிவனுள் ஐக்கியம், சிவனுள் ஒடுக்கம், சிவனுடன் இணைதல், சிவமாதல், கைலாயம் செல்லுதல், சிவனருள் பெறுதல் என்று எல்லாம் ஒன்றையேக் குறிக்கும். இப்படி விதவிதமாக உணர்ந்து கொண்டதால் தான் இன்று உலகில் இத்தனை மதங்கள். 🙁 பகவானிடம் கேட்டால், “முதலில் நீ யார் என்பதை கண்டுபிடி” என்பார். 😀

பிரம்மத்தை உணர்ந்தவர் பிரம்மமாகவே ஆவது போல், சிவ ஐக்கியத்தை உணர்ந்தவர் சிவமாகவே ஆகிறார். எனவே, இவ்வரியோடு 4ஆம் வரியையும் இணைத்து, “இகபர நற்பேற்றை வழங்கும் சிவபெருமானே” என்று பொருள் கொள்ளலாம். இந்த பெருமானார் குடி கொண்டுள்ள திருத்தலத்தை அடுத்த வரியில் வெளியிடுகிறார்.

🌼 பழநிமலை வீற்றருளும் வேலா

#பழநி என்றதும் நம் நினைவுக்கு வர வேண்டியவர் #போகர் சித்தராவார். 🌸🙏 ஆனால், அருணகிரியார் மலையை சேர்த்துக் குறிப்பிடுகிறார். போகரின் சமாதி தலம் மலையடிவாரத்தில் உள்ள #திருஆவினன்குடி ஆகும். மலை மேல் சமாதியானாவர் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அப்பெருமானார் புகழ் பெற்றவராகவும், அவரின் சமாதி தலம் ஆற்றல் மிகுந்ததாகவும் இருக்கவேண்டும் என்பதை இன்று வரை அத்தலம் ஈர்த்த & உருவாக்கிய அருளாளர்களைக் கொண்டும், நம்பிக்கையுடன் வந்து வணங்கிச் செல்லும் இலட்சக்கணக்கான அன்பர்களைக் கொண்டும் முடிவு செய்து கொள்ளலாம்.

🌼 அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர் சிறை மீட்ட பெருமாளே

இவ்வரிகளுக்குள் நுழையும் முன்னர் சமாதி நிலையை பார்ப்போம். இந்நிலையை நமது முன்னோர்கள் #சிவலிங்கம், #ஆடல்வல்லான், #கந்தவேல் (#2), #அரங்கநாதர், #முருகர் மற்றும் இவற்றின் மாறுபட்ட வடிவங்கள் வாயிலாக பதிவிட்டிருக்கிறார்கள். இவற்றுள் சிவலிங்கமும் கந்தவேலும் மிகப் பழமையானவை. இங்கே அருணகிரியார் எடுத்துக் கொண்டிருப்பது திருவரங்கநாதர் (இதிலும் பல வடிவங்கள் உண்டு. நாம் பார்க்கப்போவது பெருமான், லட்சுமி அம்மன் மற்றும் தொப்புளிலிருந்து கிளம்பிய தாமரையில் பிரம்மா இருக்கும் வடிவம்).

🌷சமாதி நிலையில் நாம் நாமாக இருப்போம் (நான் இன்னார் என்பதிலுள்ள இன்னார் நீங்கி, நான் மட்டும்)பெருமான் தொழிலின்றி படுத்திருப்பது.
🌷உடன் அறிவு மட்டுமிருக்கும் – அம்மன் அமைதியாக, பணி புரிய தயாராக அமர்ந்திருப்பது.
🌷நம்மிடமிருந்து காட்சிகளைத் தோற்றுவித்து நம்மை சமாதி நிலையிலிருந்து வெளிக்கொணர முயலும் ஆற்றலே மாயை எனப்படும். உலக இயக்கத்தின் ஆரம்பம் இது தான் என்பதால் இதை தொப்புளிலிருந்து கிளம்பும் தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மாவாக சித்தரித்துள்ளனர். காளியன்னையின் பேயாட்டம் என்பதும் இதுவே. அருணகிரியார் குறிப்பிடும் அசுரர் கிளையும் இதுவே. (#3)

(இந்த உலகம் நம்முள்ளிருந்து தான் வெளிப்படுகிறது என்ற பேருண்மையை முதன் முதலில் உணர்ந்து வெளிப்படுத்தியது திருவானைக்கா திருத்தலத்தின் மூலவருக்கு கீழ் சமாதியாகியிருக்கும் பெருமான் 🌸🙏 என்பது என் கருத்து.)

இனி, எதிர்புறத்திலிருந்து – உலகிலிருந்து – வருவோம்.

“எதை நோக்கி நம் கவன ஆற்றல் செல்கிறதோ அது வலுப்படும்”, என்கிறார் திரு #சாதுஓம் #சுவாமிகள். 🌸🙏 எண்ணிலடங்கா பிறவிகள் தோறும் நம் கவன ஆற்றலை வெளிப்புறமாகவே செலுத்தி வந்திருக்கிறோம். இதனால் நம் அசுரர் கிளையானது (#மாயை) நன்கு உரமேறி பரந்து விரிந்து பருத்துப் பெருகியுள்ளது. இக்கிளை வாடவேண்டுமெனில் (#4) இதன் உணவாகிய நம் கவன ஆற்றலை இதற்கு எதிர்புறமாக – நம் மீது (நான் என்னும் தன்மையுணர்வின் மீது) – திருப்பவேண்டும். இதனால் கிளையும் வாடும்; மனதின் தங்குதிறனும் அதிகரிக்கும். ஒரு சமயத்தில் கிளை நன்கு வாடி ஒதுங்க, இவ்வளவு காலம் அது மறைத்திருந்த “நாம் நாமே” என்ற பேருண்மை (சிவ தத்துவம்) வெளிப்படும். இந்த பேருண்மையே #இறைவன், #தேவன், #அமரர் என்று பலவாறு போற்றிப் புகழப்படுகிறது. எதனால் இப்பேருண்மை வெளிப்பட்டதோ அதற்கு (இறையருளால் தோன்றும் அறிவுக்கு) கந்தவேல் என்று பெயர். இப்படி வெளிப்படுத்துவதற்கே #சிறைமீட்டல் என்று பெயர். நாம் நாமே என்ற சிவதத்துவம வெளிப்பட்ட பிறகே நாம் யார் என்று உணர்வோம்; நாம் என்றுமே நாமாகவே (சிவமாகவே) இருந்திருக்கிறோம் என்ற உண்மையையும் உணர்வோம். இதனால் தான் கந்தவேலுக்கு #தகப்பன் #சுவாமி மற்றும் #சுவாமிநாதன் (உடையவருக்கே தலைவன் / உடையவரையே காப்பவன்) என்று பெயர்கள்.

வேதம் வேண்டாம் சகலவித்தை வேண்டாம்
கீதநாதம் வேண்டாம் ஞானநூல் வேண்டாம்
ஆதிகுருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்
திருப்புகழைக் கேளீர் தினம்

கந்தனுக்கு அரோகரா… 🌹🙏
முருகனுக்கு அரோகரா… 🌺🙏
வள்ளி மணாளனுக்கு அரோகரா… 🏵🙏

யானற்று இயல்வது தேரின் எது அது
தான் தவமென்றான் உந்தீபற
தானாம் #ரமணேசன் உந்தீபற

🌸🙏🌸🙏🌸

குறிப்புகள்:

1. அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே

2. இன்றும் சில முருகத்தலங்களில் வேலாயுதம் மூலவராக உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் கூட சமீபகாலம் வரை வேலாயுதம் தான் மூலவராக இருந்திருக்கிறது.

3. இவ்விளக்கத்திற்கும் வைணவத்திற்கும் சிறிதும் சம்பந்தமேயில்லை. வைணவத்தை வைத்து விளக்க வேண்டுமானால், அது “காதுல பூ” வேலையாகத் தானிருக்கும். 😁

4. எதற்காக அசுர கிளையை வாட்டவேண்டும்? எதற்காக பேருண்மை வெளிப்படவேண்டும்? “மிக வாழ” என்று பதில் கூறுகிறார். எனில், மரணமில்லா பெருவாழ்வு. பர வாழ்வு. நிலைபேறு.

Advertisements

#ஆங்கில புத்தாண்டு எனப்படும் #சொதப்பல் #புத்தாண்டு!!! 😁😁

தி #மேட்ரிக்ஸ் (#The #Matrix) என்ற படத்தில் ஒரு காட்சி. சைஃபர் என்பவரும் ஏஜென்ட் ஸ்மித் என்பவரும் கனவுலக உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருப்பார்கள். சைஃபர் கனவுலகத்திலிருந்து எழுப்பப்பட்டவர். மீண்டும் கனவுலகத்திற்கு திரும்ப முயல்பவர். ஸ்மித், கனவுலகத்திலிருந்து யாரும் எழாமலும், எழுப்ப முயல்வர்களை தடுக்கவும் செய்பவர்.

சைஃபர்: இந்த இறைச்சித் துண்டு உண்மையில் இல்லை என்று எனக்குத் தெரியும். இதை வாயில் போடும் போது, இது மிருதுவாகவும் சுவையாகவும் இருப்பதாக மேட்ரிக்ஸ் (மாயை) எனது மூளைக்குத் தகவல் கொடுக்கிறது என்பது எனக்குத் தெரியும். கனவிலிருந்து விழித்த இந்த 9 ஆண்டுகளில் நான் உணர்ந்தது என்ன தெரியுமா? (இறைச்சித் துண்டை வாயில் போட்டு, சற்று மென்று, ரசித்து ருசித்து விட்டு) அறியாமையே சுகம்!!

🌺🌺🌺

கடந்த 20+ வருடங்களில் ஆரிய, ஆங்கிலேய, போலி திராவிடப் போர்வைகளைக் கிழித்துக் கொண்டு எத்தனையோ உண்மைகள் வெளிவந்துவிட்டன. இவற்றில் சிலவற்றையோ அனைத்தையுமோ அறிந்து கொண்டும், பரங்கியரின் சொதப்பல் #ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் தமிழர்கள் மேற்கண்ட சைஃபருக்கு சமமானவர்கள் – இழிவானவர்கள்! துரோகிகள்!! 👊👊👊

🏵🏵🏵

வானவியலில் நம் முன்னோர்கள் முன்னோடிகள் என்பதற்கு சில சான்றுகள்:

🌋 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், பகலவன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே வருட பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்!! 👏👏 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. (ஆகையால், சித்திரை முதல் நாளன்று பூமியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே #தென்மதுரை!)

இந்த துல்லியமான முறையினால் ஒவ்வொரு ஆண்டும் முழுதாக முடிவடையும். ஆனால், பரங்கி ஆண்டு முழுமையாக முடிவடைவதில்லை. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 நாளை சேர்க்கின்றனர். இதற்கும் பல விதிகள் உண்டு (4ஆல் வகுபட வேண்டும், 100ஆல் வகுபட்டாலும் 400ஆல் வகுபட வேண்டும், 400ஆல் வகுபட்டாலும் 4000ஆல் வகுபடக்கூடாது, …😲). இன்றைய நிலையில் மீண்டும் பரங்கி ஆண்டு சீராவது கி.பி. 4000 வருடத்தில் தான். (பரங்கி ஆண்டை “சொதப்பல் ஆண்டு” என்று அழைப்பதற்கு இதை விட வேறு என்ன சிறந்த காரணம் வேண்டும்? 😛)

🌋 நம் முன்னோர்களின் ஆண்டு கணக்கிற்கு, தன் தாவர குழந்தைகளை பூக்க விட்டு, இயற்கை அன்னையும் ஆமோதிக்கின்றார்!! 😄 மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்க்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி, புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் வருட பிறப்பு காலத்தில் தான்.

🌋 உலகிலுள்ள பெரும்பாலான வருட பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் வருடமும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. மீண்டும் நம்முடன் ஏற்பட்டத் தொடர்பினால் தங்களது ஆண்டு கணக்கை திருத்திக் கொண்ட பரங்கியர்கள், தங்களது மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும், கிறித்துவத்தை முன்னிறுத்துவதற்காகவும், ஞானி யேசு பிறந்தது ஜனவரி 1 என்று ஒரு நம்பிக்கை இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் ஜனவரி 1-ற்கு மாற்றினர் (மாற்றியது அன்றைய போப் கிரிகோரியன்). அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ வருட பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து “முட்டாள்கள்” என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! 😂 (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்!! 😉).

🌋 சித்திரை 1-ஐ வருடத்தின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் கற்றுக் கொண்டனர் எனலாம்! ஆரியர்களின் உத்திராயண-தட்சிணாயன கணக்கும் நம்முடையது தான்!!

அவர்களது பூர்விகமான ரிஷிவர்ஷாவில் (இன்றைய சைபீரியா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு ரஷ்யா) பகலவன் காட்சி தருவதே வருடத்திற்கு சில நாட்கள் தான். குகைகளையும், கூடாரங்களையும் விட்டு தகுந்த பாதுகாப்பின்றி வெளிவந்தால் இரத்தம் உறைந்துவிடும் நிலை. இதில் எங்கிருந்து அயண ஆராய்ச்சி செய்திருக்க முடியும்? மேலும், உத்திராயணமும் தட்சிணாயனமும் சரியாக 6 மாதங்களாகப் பிரிவது பூமத்தியரேகைப் பகுதியில் தான் – நம் முன்னோர்கள் வாழ்ந்த தென்மதுரையில் தான்!! நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, தமது என்று முத்திரை குத்தி, மீண்டும் நம் தலையிலேயே கட்டிவிட்டார்கள் (கோல்கேட்காரன் கரியையும், உப்பையும் அன்று கிண்டல் செய்து விட்டு, இன்று அவற்றைக் கொண்டே பற்பசை தயாரித்து நம்மிடம் விற்பது போல 😝).

🌋 “இவ்வளவு பாரம்பரியம், அறிவியல், வரலாறு இருந்தும் நம் மக்கள் ஏன் ஆங்கில புத்தாண்டன்று நம் திருத்தலங்களுக்கு செல்கின்றனர்?” என்ற கேள்வி எழலாம். அன்று, சமூகத்தின் முக்கிய நபர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பகுதிக் கொள்ளைக் கூட்ட தலைவனை (பரங்கிப் பிரபு) சந்தித்து பூ மாலை, பழம், இனிப்பு போன்ற பரிசுகளை அளித்து வாழ்த்து சொல்ல / பெற வேண்டும். இந்த நச்சுப் பாம்புகளிடமிருந்து தப்பிக்க எண்ணிய நம் பெரியோர்கள் கண்டுபிடித்த வழி தான் ஆங்கில புத்தாண்டன்று நம் திருத்தலங்களுக்கு செல்வது. திருவள்ளிமலை சுவாமிகள் திருத்தணி படித்திருவிழாவை ஆரம்பித்ததும் இப்படித் தான். நம் சமய நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது என்பது கொள்ளைக் கூட்டத் தலைவியின் (இங்கிலாந்து ராணி) ஆணை. இதைப் பயன்படுத்தி பகுதி கொள்ளையர்களிடமிருந்து தப்பினர் நம் பெரியோர்கள்! 😎

“இன்றும் இது தொடரவேண்டுமா?” என்று கேட்டால், உறுதியாகத் தொடரவேண்டும் என்பேன். பரங்கியரின் சொதப்பல் ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் கருங்காலி / அறிவிலித் தமிழர்கள் இருக்கும் வரை இவ்வழக்கமும் தொடரவேண்டும்!! 👊👊

🌹🌹🌹

மேற்சொன்ன யாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் பார்ட்டிகளும் ஏற்றுக் கொள்ளும் செய்தி ஒன்றுண்டு – மிகப் பழமையான மாந்தர்களான மாயன்களிடமும் எகிப்தியர்களிடமும் சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாள் மற்றும் நேரக் காட்டிகள் இருந்தன என்பதே அது. (பழமை என்று வரும் போது பரங்கியரும் இங்குள்ள அவர்தம் புகழ்பாடிகளும் சீனர்களை, எகிப்தியர்களை, மாயன்களை, கிரேக்க – ரோமானியர்களை ஏற்றுக் கொள்வர். நம்மை முற்றிலும் தவிர்ப்பர்.) இந்த மாயன்களும் எகிப்தியர்களும் நம் தமிழினத்தைச் சேர்ந்தோர் என்பது அண்மை கால ஆராய்ச்சிகளின் முடிவு!! 👍😘 (இப்போது எப்படி நம்மை தவிர்ப்பார்கள்? 😏)

வைகுண்ட ஏகாதசி – நம்மாழ்வார் விடுதலை (முக்தி) அடைந்த நாள்!! 🌸🙏

#விழாநாதர் (#உற்சவர்) #நம்பெருமாள் (சிலை) திரு நம்மாழ்வாரைக் குறிக்கும். விழாநாதர் வடக்கு வாசல் (வைகுந்த/சொர்க்க வாசல்) வழியாக வெளிவருவது என்பது நம்மாழ்வார் அவரது கபாலத்தின் வழியே வெளியேறியதை (கபால மோட்சம்) குறிக்கும்.

விழாநாதருடனோ அல்லது தனியாகவோ வடக்கு வாசல் வழியாக வெளிவந்துவிட்டால் #நிலைபேறு (#வைகுண்டம்) நமக்கு கிடைத்துவிடுமா? உறுதியாக கிடைக்காது!!! 😀

மனம் அழிந்தால் மட்டுமே நிலைபேறு கிடைக்கும். மனதை அழிக்காமல், யோகப் பயிற்சியினால் கபால பிளவு ஏற்பட்டு, அதன் வழியாக உயிர் வெளியேறினாலும் நிலைபேறு கிட்டாது (எ.கா.: திரு காவியகண்ட கணபதி முனிவர்). மேலும், மனம் அழிந்த பின்னர் உயிர் எப்படி வெளியேறினால் என்ன? குடம் உடைந்த பின்னர், குடத்தின் உள்ளும் புறமும் எப்படி கலந்தால் என்ன?

திரு நம்மாழ்வார் போன்ற மெய்யறிவாளர்களை வணங்குவது, போற்றுவது, மரியாதை செய்வது என்பது அவர்களது அறிவுரைகளை கசடறக் கற்று, அவர்கள் காட்டிய வழியில் பயணிப்பதேயாகும்.

யானேயென்னை அறியகிலாதே
யானேயென்தனதே யென்றிருந்தேன்
யானேநீயென் னுடைமையும்நீயே
வானேயேத்து மெம்வானவரேறே

(திருநம்மாழ்வார், 3107, நாலாயிர திவ்யப் பிரபந்தம்)

பதம் பிரித்து…

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

இப்பாடல் முழுவதும் அத்வைதம் வெளிப்படும். ஆனால், வைணவத்திற்கு ஏற்றவாறு பொருள் கூறியிருப்பார்கள்!! 😀 இது பற்றி #பகவான் திரு #ரமணர் அருளியதை கீழே கொடுத்துள்ளேன். (Day by Day with Bhagavaan, Dhevaraaja Muthaliyaar)

🌼🌷🌺🌻🌼

திரு நம்மாழ்வாரின் விடுதலை நிகழ்வு இவ்வளவு சிறப்பாக திருவரங்கத்தில் கொண்டாடப்பட்டாலும், அவர் சமாதியானது திருக்குருகூரில் (#ஆழ்வார் #திருநகரி) தான். திருவரங்கத்தில் (மூலவருக்கு கீழே) சமாதியாகி உள்ளது 18 சித்தர்களில் ஒருவரான #சட்டைமுனி #சித்தர். 🌸🙏 முதன்முதலில் திருவரங்கத்தில் நம்மாழ்வாருக்கு விழா எடுத்தது திருமங்கையாழ்வார். பின்னர் வந்த ஆச்சார்யார்களால் 10 நாட்கள், 20 நாட்கள் என விரிவு படுத்தப்பட்டு தற்போதைய நிலையை பிற்காலத்தில் அடைந்தது.

🌼🌷🌺🌻🌼

ஏகாதசியன்று பட்டினி இருந்து, துவாதசியன்று அயல்நாட்டுக் காய்கறிகளை தவிர்த்து, உள்ளூர் காய்கறிகளைக் கொண்டு உணவு சமைத்து உண்ணுவது என்பது உடல்நலம் சார்ந்தது. பட்டினி கிடந்து உடல் வாடும் போது, மனதின் குவியும் திறன் அதிகரிக்கின்றது. இதைப் பயன்படுத்த தெரியாவிட்டால் ஆன்மிக பலன் ஏதும் கிடைக்காது. மற்றபடி இதற்கும் வைணவத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. இதே போன்றது தான் ஏனைய மற்ற நாட்களும் (பிரதோஷம், சஷ்டி, “அமாவாசை முழுஇரவு உபவாச ஜெபம்” 😁).

#உபவாசம் எனில் “அருகில் இருத்தல்”. எதனருகில்? “நான் என்னும் தன்மையுணர்வின்” அருகில்! இறை, இறையுணர்வு என்பதெல்லாம் இதுவே. தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள் நமது கவன ஆற்றலை (மனம் – அனுமார்) வெளிப்புறமாகவே இருக்கச் செய்துவிடும். இந்த கவன ஆற்றலை நம் மீது திருப்பி, நமதியல்பை சற்று நேரமாவது உணரவே தினசரி வழிபாடு, பூசை என சில ஏற்பாடுகளும், அடுத்த நிலையாக மாதத்தில் ஒரு சில நாட்கள் அருள் பெறவும் (அருள் எனில் அருகில் இருத்தல்; இறையுருவிற்கு போடப்படும் மலர்மாலை எவ்வளவு அருகில் உள்ளதோ அவ்வளவு அருகில்) உடல் சீராகவும் ஒதுக்கி வைத்தனர் (இன்று, தினசரி மனதைக் கெடுத்துக் கொள்ள திறன்பேசிகளும், மாதம் சில முறை உடலை கெடுத்துக் கொள்ள உணவகங்களையும் தேடிச் செல்கிறோம் 😝).

🌼🌷🌺🌻🌼

💮 #திரு எனில் தன்மையுணர்வில் நிலைபெறுதலைக் குறிக்கும். மெய்யறிவாளர்களுக்குப் (ஞானிகளுக்கு) பொருந்தும்.

💮 #சைவம் எனில் அசைவற்று / உள்ளும் புறமும் ஒன்றுபட்டு என்று பொருள். சைவர்கள் அணியும் உருத்திராக்கம் அசைவற்றத் தன்மையைக் குறிக்கும். காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தாலும், மாறாத அசையாத வெண்திரை போன்றவர்கள் என்று பொருள்.

💮 #வைணவம் எனில் உள்ளும் புறமும் அற்று என்று பொருள்.

(சைவம் – கிறிஸ்டோபர் நோலன், வைணவம் – முருகதாஸ் 😁)

#பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு நாள் – டிசம்பர் 6

ஒருசமயம் #அம்பேத்கர் தாம் ஏன் #இஸ்லாம் தழுவவில்லை என்பதை விளக்கினார்:

“நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால், கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப் பட்டிருக்கும். ஆனால், ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும். ஆகையால், ‘மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன்’ என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை’’ என்று கூறினார்

(Ambethkar – A Critical Study)

💥💥💥

அம்பேத்கர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் நாடு என்ன ஆகியிருக்கும் என்பதைப் பற்றி #பாலாசாகிப் #தேசாய் கூறுகிறார்:

‘‘இந்த நாட்டுக்கு மிகப் பெரிய சேவை செய்துள்ளார் பாபாசாகிப் அம்பேத்கர். பாரதத்தின் மீதும், அதன் பண்பாட்டின் மீதும் அவருக்கு அன்பு இருந்ததால்தான் அவர் #புத்தநெறி தழுவினார். அதை விடுத்து இஸ்லாம் மதம் போயிருப்பாரேயானால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். நாடே சின்னாபின்னப்பட்டல்லவா போயிருக்கும்!’’

(Kamble, J.R. Rise and Awakening of the Depressed Classes in India, National Publishing House, New Delhi, 1979, P.211)

அதாவது இஸ்லாம் மதத்திற்கு மாறினால் நாடே சீரழியும் என்பது அம்பேத்கருக்கு தெரிந்திருந்த காரணத்தால்தான் அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கவில்லை.

💥💥💥

14-10-1956 அன்று அம்பேத்கர் புத்தமத தீக்‌ஷை பெற்ற போது பேசியதாவது :

….புத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். முஸ்லீம்கள் தங்கள் படையெடுப்புகளின்போது புத்தர் பிரானின் உருவச்சிலைகளை அழித்துச் சிதைத்தனர். இதுவே புத்தமதத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதலாகும். இந்தப் படையெடுப்புகளுககு அஞ்சி புத்தபிக்குகள் தப்பிச் சென்றனர். சிலர் திபேத்துக்குச் சென்றனர். சிலர் சீனாவுக்கு சென்றனர். சிலர் வேறு எங்கோ சென்றனர்.’’ என்று கூறினார்.

ஆகவே அம்பேத்கர் இஸ்லாம் மதம் மாறாததற்கு, புத்தமதத்தை அழித்தது இஸ்லாம் என்று தெளிவாக அறிந்திருந்தது தான் காரணம்.

(மூலம்: http://www.tamilhindu.com/2011/08/why_ambedkar_converted_to_buddhism-14/)

Clyde Tombaugh did not discover Pluto!!

Another cat is out …

#Clyde #Tombaugh, like his predecessors (Newton, etc.), stole the discovery of #Pluto from a great astronomer of Bhaaratham – #Venkatesh #Bapuji #Ketkar!! 😡😡

Clyde must have been a proud White – a race that excels in stealing, usurping, backstabbing, leg pulling, parasitic living, sleeper cell creation and destruction of Mother Nature!! 😛😜😝

Wherever Whiteman sets foot, destruction is sure to follow!! ✊👊👊👊

(Attachment: Found it on Aravindhan Neelakandan’s page on FB)

அனுமாரையும் குடும்பி ஆக்கிவிட்டார்கள்!!

மனதைக் குறிக்க வைணவர்கள் உருவாக்கிய உருவம் தான் #ஆஞ்சநேயர் / #அனுமார்.

அலைபாயுதல் என்பது மனதின் இயல்பு. இதனால் தான் குரங்கைக் குறியீடாக எடுத்துக்கொண்டனர். இப்போது இந்த இயல்பை தனியாகப் பிரித்து, #சுவர்ச்சலா தேவி என்ற பெண்ணாக்கி, அப்பெண்ணிற்கு மனித முகத்தை வேறு கொடுத்துள்ளனர். அலைபாயும் தன்மை இல்லையெனில் மனம் மனமாகாது. அது “திரு” என்றாகும் வாய்ப்புள்ளது (திரு – நிலைத்த; நிலைபேறு – மெய்யறிவு – இறை)!!

“ஒரு நீர் நிலையில் உள்ள நீர் அசையாமலும் தெளிவாகவும் இருந்தால் நீர் தெரியாது. உள்புறம் மட்டுமே தெரியும்.” என்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர் (பகவத் வசனாம்ருதம், எண் # 146; இதே விளக்கத்தை குங்ஃபூ பாண்டா – பாகம் 1 என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் பயன்படுத்தியிருப்பர் (ஆசான் ஊக்வே ஆசான் ஷிஃபூவிற்கு மெய்யறிவு பற்றி விளக்கமளிக்கும் காட்சி)). இது போன்றே மனதின் அலைபாயும் தன்மையை விளக்கிவிட்டால் அங்கே மனம் இருக்காது; இறை வெளிப்படவே வாய்ப்புள்ளது. அப்படி வெளிப்படுங்கால், இணைப்பு படத்தின் பொருள் பெருந்தவறாகிவிடும் – பெருமாளும் சுவர்ச்சலா தேவியும் அமர்ந்திருப்பது போலாகிவிடும்!! 😀

இறையுருவம் என்பது ஒரு காலத்தில் ஒரு மெய்யறிவாளரின் (ஞானியின்) சமாதியைக் குறிப்பதற்காக (அடையாளத்திற்காக) பயன்படுத்தப்பட்டது. இன்று, அழிக்கப்பட வேண்டிய மனதிற்கு துணைவியைத் தரும் அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளது. பெரும்பாலான மதங்களும், நம் சமயத்தின் சில பிரிவுகளும் “மனதை அழி” என்று அறிவுறுத்தும் போது, நம் சமயத்தின் மீத பிரிவுகள் மட்டும் மனதைக் கொண்டாட 3 முக்கிய காரணங்கள்:

▶ மனதின் வழியாகத்தான் இறையை அடைய முடியும்
▶ உலகம் செவ்வனே இயங்க மனம் இன்றியமையாதது
▶ மனமும் இறைவனின் படைப்பே

வாழ்க்கை வண்டி ஓட வேண்டும் என்பதற்காக, மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து வைக்கிறார்கள். பின்னர், அது நம் சமயத்திற்கே பெரும் கேடாக வந்து நிற்கின்றது!! 😔

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் யாவர்க்கும் இது உந்தீபற

— பகவான் ஸ்ரீரமணர், உபதேச உந்தியார்

🌸🙏🌸🙏🌸

(ஸ்ரீஆஞ்சநேயரைப் மேலும் அறிந்து கொள்ள: https://m.facebook.com/story.php?story_fbid=10156330139391052&id=698176051)

#சிறைமீட்ட #தமிழ்ப்பா — முனைவர் எஸ். சந்திரா

#பரத்தைவயல் #நாக #முத்தையா என்ற புலவர் இராமநாதபுரத்திலுள்ள #நயினார் #கோயில் நாகநாத சுவாமியிடமும், சவுந்தர்யநாயகி அன்னையிடமும் பேரன்பு கொண்டவர்.

ஒரு சமயம், அவர் முத்துராமலிங்க சேதுபதி அரண்மனைக்குச் செலுத்தவேண்டிய பணத்தில் நூறு பொன் பாக்கி வைத்து விட்டார். அதனால் இரக்கமின்றி தாசில்தார் அவரை சிறையில் அடைத்துவிட்டார்.

சிறையில் வாடிய அவர் #நயினார்கோயில் இறைவனை நினைத்து இந்த பாடலை பாடினார்:

கையிலே ஒருகாசுக்கு இடமோ இல்லை
கடனென்றால் ஐஞ்ஞூறு பொன் மேலாச்சு
நெய்யிலே கைபோட்டுக் கொடுப்போம் என்றால்
நிருவாகம் அரண்மனையார் அறிய மாட்டார்
பையிலே பணமிருக்க நீரும் சும்மா
பார்த்திருக்க நீதியுண்டோ பரனே எம் ஐயா
மையிலே தோய்ந்த விழி உமையாள் பங்கா
மருதூரா என் வரிக்கே வழி செய்வாயே.

அவர் பாடிய பாடலைக் கேட்டு பரமனின் மனம் இளகியது! அன்பனுக்கு உதவ அன்றிரவே இறைவன் சேதுபதியின் கனவில் சென்று, “ஏன் என் மகன் நாகமுத்தனை சிறையில் அடைத்தாய்?” எனக் கேட்டு மறைந்தார்.

திடுக்கிட்டு எழுந்த சேதுபதிக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் யோசித்துவிட்டு மீண்டும் உறங்கச் சென்றார்.

ஆனால், சற்று நேரத்தில் அன்னையும் அவர் கனவில் தோன்றி, “மகனே, என் தாலிப்பொட்டை அடகு வைத்து, வரிப் பணத்தை வாங்கிக் கொள்” என்று சொல்லி மறைந்தார்.

நடுக்கத்துடன் விழித்தெழுந்த சேதுபதி விபரமறிய தாசில்தாரை வரவழைத்தார். நடந்ததை அறிந்து, தானே சிறைச்சாலைக்குச் சென்று, அவரை வணங்கி மன்னிப்புக் கேட்டு அவரை விடுவித்தார். அத்தோடு, தன் தவறுக்குப் பரிகாரமாக அவருக்கு இரண்டு கிராமங்களை நன்கொடையாக அளித்தார்.

(இந்தக் கட்டுரை #ஸ்ரீராமகிருஷ்ண #விஜயம், மார்கழி 2018 இதழில் வெளியாகி உள்ளது. அதன் ஒளியுருவை இங்கே இணைத்துள்ளேன். பின்னரும், எழுத்துருவாக பதிவேற்றக் காரணம், இணையத் தேடலில், இது போன்ற ஆராய்ந்து உறுதி செய்யப்பட்ட நிகழ்வுகள், இடம் பெற வேண்டும் என்பதால் தான்.)