Monthly Archives: June 2022

பசு மாட்டின் கால்களுக்கு இடையில் நுழைந்து வருவதின் பொருள்

நன்கு வளர்ந்துள்ள பசு மாட்டை, அதன் மடி சுருங்கியிருக்கும் போது, சற்று தொலைவிலிருந்து பார்க்கவும். திரு கொங்கணவரின் (திருமலைப் பெருமாள்) 🌺🙏🏽🙇🏽‍♂️ திருவாசி போன்று தெரியும். அதை அப்படியே தலைகீழாக்கினால் வைணவச் சின்னமான நாமம் கிடைக்கும். நாமம் என்பது பெண்ணுறுப்பாகும். பெண்ணுறுப்பின் வழியே நுழைந்து வருவதென்பது பிறவியெடுப்பதற்கு சமமாகும்.

வைணவர்கள் அம்மன் வழிபாட்டிலிருந்து வந்தவர்கள். இவர்களுக்கு உலகைக் காண்பவனைவிட, காணப்படும் உலகம் மேலானது. ஏனெனில், உலகமென்பது அன்னை / பெருமாளாகும். பெருமாளை (உலகை) காணவேண்டுமெனில் உடல் வேண்டும். உடல் வேண்டுமெனில் பிறவியெடுக்கவேண்டும். பிறவியெடுக்கவேண்டுமெனில் ஆசைப்படவேண்டும்!!

இன்றைய ஜிஎஸ்டி-சூழ் உலகில் பிறக்க ஆசைப்படுவதென்பது… 🥴

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

எது உண்மையான காசி திரு விசுவநாதர் திருக்கோவில்?

ஓரிடத்தில் ஒரு பொருளை புதைத்துவிட்டு, அவ்விடத்தின் மேல் ஓர் அடையாளத்தை நட்டு வைக்கிறோமென்று வைத்துக்கொள்வோம். பல காலம் கழித்து, ஏதோ ஒரு ஏதுவினால் நட்ட அடையாளத்தை வேறொரிடத்திற்கு இடமாற்றம் செய்கிறோம். இப்போது, மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருள் தானாக இடம்பெயர்ந்துவிடுமா?

அடுத்து, இன்னொரு காட்சி.

பெரும் புகழ் பெற்ற ஒரு மெய்யறிவாளரின் உடல் இறக்கிறது. திருமந்திர வழிகாட்டுதலின்படி ஓரிடத்தில் அவ்வுடலை புதைக்கிறர்கள். அவ்விடத்தின் மேல், அவரது உள்ள நிலையைக் குறிக்கும் சிவலிங்கத்தை அடையாளமாக நிறுவுகிறார்கள். பின்னர், அவ்விடம் புகழ் பெற்ற திருக்கோவிலாக உருமாறுகிறது. காலம் விரைவாக உருண்டோடுகிறது. மெய்யறிவாளர் மறைக்கப்பட்டு, பின்னர், மறக்கப்படுகிறார். அடையாளமே உள்ளபொருளாகிப்போகிறது.

இந்நிலையில், ஆண்குறி போன்று வேடமிட்ட ஆண்களையும், பெண்குறி போன்று வேடமிட்ட பெண்களையும் கொண்ட ஒரு கூட்டம் வந்துசேர்கிறது. “எங்காளு சொல்லியிருக்காக. எங்க புத்தகத்துல சொல்லியிருக்கி.” என்று கதை விட்டுக்கொண்டு (பிடுங்கிக்கொள்வதற்கும் நீதியை கடைபிடிப்பவர்கள்! 😉) அட்டூழியத்தில் ஈடுபடுகிறது. ஒரு சமயத்தில், தன் பக்கம் தோற்கிறது என்பதையுணர்ந்த கருவறை பூசாரி, அடையாளத்தை மட்டும் எடுத்து, தன்னுடன் அணைத்தவாறு, ஒரு கிணற்றில் விழுந்துவிடுகிறார். வெற்றி பெற்றக் கூட்டம், திருக்கோவிலை இடித்து தள்ளிவிட்டு, அங்கு ஒரு கலவி நிலையத்தைக்(*) கட்டுகிறது.

சில காலத்திற்கு பின்னர், ஓர் இந்துப் பேரரசி வருகிறார். அடையாளத்தை மீட்டெடுத்து, கலவி நிலையத்திற்கு அருகிலேயே புதிய திருக்கோவிலைக் கட்டி, அதில் அடையாளத்தை நிறுவுகிறார்.

இப்போது, புதிய இடத்தில் அடையாளத்தை நிறுவியவுடன் மெய்யறிவாளர் தானாக இடம் பெயர்ந்துவிடுவாரா?

oOo

அந்த மெய்யறிவாளரின் பெயர் திரு நந்திதேவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆகும். கங்கையாற்றின் குளிர்ச்சியைக் கொண்டே, தன்னை நாடி வந்தோரை மெய்யறிவு பெறச் செய்த பெருமானாவார். “நாம் உடலல்ல” என்ற அறிவை நாம் பெறுவதற்கு நமது மாமுனிவா்கள் எண்ணற்ற வழிகளை காண்பித்திருந்தாலும், இப்பெருமான் காட்டிய “கங்கையில் மூழ்குதல்” எனும் வழியே பாமர மக்களுக்கும் ஏற்ற எளிய வழியாகும்!

oOo

அடுத்து வரும் பகுதி அனைவருக்கும் ஏற்றதல்ல. மதக்குறியீடுகளைப் பற்றி ஓரளவேனும் தெரிந்தவர்களே மேற்கொண்டு தொடரவும். நன்றி.

* – கலவி நிலையத்தின் முன்னே இரண்டு மினார்கள் இருப்பின்:

🔸 இரு மினார்களும் ஒரு பெண்ணின் தூக்கிய இரு கால்களுக்கு சமம்

🔸 நடுவிலிருக்கும் நுழைவாயில் என்பது அப்பெண்ணின் பெண்ணுறுப்புக்கு சமம்

🔸 கட்டிடத்தின் மேல் கவிழ்த்தப்பானை போன்ற அமைப்பு பெண்ணின் கருப்பையின் மேல் பகுதிக்கு சமம்

மொத்தத்தில் அக்கட்டிடம், கலவியின் போது ஒரு பெண் பாங்காக, ஆடவனுக்கு ஏற்றவாறு, கால்களை தூக்கிக் கொண்டு படுத்திருப்பதிற்கு சமம். (அங்கு தினமும் 5 முறை விடுக்கப்படும் அறைகூவலுக்குப் பெயர் “பாங்கு” ஆகும்! பாங்கு = தயார்) அந்த கூட்டத்தை பொறுத்தவரையில் வழிபாடென்பது கலவிக்கு சமம். எனவே, அக்கட்டிடங்களை “கலவி நிலையங்கள்” என்றழைப்பதே சரியாகும்.

(கலவி நிலையத்தை சுற்றி 4 மினார்கள் இருந்தாலோ அல்லது ஒரேயொரு மினார் இருந்தாலோ, மேற்கண்ட விளக்கம் பொருந்தாது)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

அன்னையின் மைந்தனும் தகப்பன் சுவாமியும்!!

விநாயகர் எனில் விசேட நாயகர். அதாவது, சிறப்பு வாய்ந்த நாயகர்.

🌷 இவரிடமென்ன சிறப்புள்ளது?

அப்பனின் தொடர்பில்லாமல், அன்னையால் மட்டுமே உருவாக்கப்பட்டவர் என்பதால் “சிறப்பு வாய்ந்தவர்” ஆகிறார். அதாவது, நம்மிடம் சேர்ந்துள்ள அறிவு (விநாயகர்) அனைத்தும் உலகிலிருந்து (அன்னை) பெறப்பட்டது; உள்ளபொருளில் (அப்பன்) இருந்து அல்ல என்பது உட்பொருள்.

அடுத்து, இளைய பிள்ளையான கந்தன்.

கந்தன் – திரண்டவன் – நம்மிடமிருந்து திரண்டு வெளிப்படும் ஓர் ஆற்றல் / அறிவு.

🌷 இவ்வாற்றல் / இவ்வறிவு வெளிப்படும்போது 4 செயல்கள் ஒருங்கே நடைபெறும்:

🔸 ஆற்றல் / அறிவு வெளிப்படுதல் (கந்தன்)

🔸 காணப்படும் உலகம் (அன்னை) மறைதல்

🔸 நம்மை நாம் (அப்பன்) தெளிவாக உணர்தல்

🔸 “நாம் இன்னார்” என்ற பொய்யறிவு (அசுரன்) நீங்குதல்

🌷 கந்தன் எனும் ஆற்றல் / அறிவு வெளிப்படும்போதுதான் நம்மை நாம் (தகப்பன்) தெளிவாக உணர்வதால், கத்தனுக்கு “தகப்பன் சுவாமி” / “சுவாமிநாதன்” என்று பெயரிட்டனர்.

🌷 முதலில் உலகைப் பற்றிய தேவையான அறிவு (விநாயகர்) கிடைக்கிறது. இறுதியில், நம்மைப் பற்றிய அறிவு (கந்தன்) கிடைக்கிறது. இதனால், விநாயகர் மூத்தவராகிறார்; கந்தன் இளையவராகிறார்.

🌷 விநாயகர் எனும் அறிவு உலகிலிருந்து பெறப்பட்டது. இதனால்தான், அன்னையின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சந்தனத்திலிருந்து (உலகிலுள் நானாவகையான பொருள்களிலிருந்து) பிறந்தவர் விநாயகர் எனப்படுகிறார். இதற்கு மாறாக, கந்தன் எனும் மெய்யறிவு நம்மிடமிருந்து பிறக்கிறது. இதனால்தான், அன்னையின் துணையில்லாமல், அப்பனிடமிருந்து பிறந்தவர் கந்தன் எனப்படுகிறார்.

(இங்கு கந்தன் மெய்யறிவுக்கு சமமாகிறார். இதே கந்தன் சிவகுடும்பத்தில் ஒருவராய் வீற்றிருக்கும்போது மனதிற்கு சமமாவார். இவரே தனியாகவோ அல்லது துணைவியருடன் இருக்கும்போது உள்ளபொருளாகிறார். தமிழ் எழுத்துகளை இடத்திற்கேற்றவாறு உச்சரிப்பது போன்று, இவரையும் இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ளவேண்டும்.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

திருநீறு தரிப்பதின் உண்மைப் பொருளை நாம் மறந்துபோயிருக்கலாம். ஆனால், பரங்கியனைப் போல் முரணாக்கிவிடவில்லை!

சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தாவிடம் அவர் தரித்திருக்கும் திருநீறு பற்றி ஒரு பரங்கியர் கேட்கிறார். அதற்கு அவர், அது அவரது இளம்வயது முதல் பெற்றோர் ஏற்படுத்திய பழக்கவழக்கம் என்றும், சில சமயம் நற்பேறு (Good Luck) பெற்றுத்தருகிறது என்றும் பதில் கூறுகிறார்.

சமயச் சின்னங்களுள் மிக மேன்மையானது திருநீறாகும். அதை தரிப்பது நற்பேறுக்காகத்தான். ஆனால், மேற்கண்ட நற்பேறுக்காக அல்ல (not for Good Luck). வீடுபேறு எனும் மேலான நற்பேறுக்காக!

நமதுடல், நாம் வாழும் உலகம் என யாவும் பொய்யாகும். வெறும் தோற்றம் மட்டுமே. காணும் நாம் மட்டுமே உண்மை. இந்த அறிவே திருநீறு. இந்த அறிவை விடாது பிடித்திருப்பதே திருநீறு தரிப்பது. திருநீற்றை தொடர்ந்து தரித்து, அந்த திருநீறாக ஆவதே வீடுபேறு!

oOo

ஒரு வேளை, நம் பிரக்ஞானந்தா அந்த பரங்கியரிடம், “உங்களில் பலர் கூட்டல் குறியீட்டை கழுத்திலும், மணிக்கட்டிலும் மற்றும் பல இடங்களிலும் தொங்கவிட்டுள்ளீர்கள். அதன் பொருளென்ன? அது நற்பேறு ஏதும் பெற்றுத்தருகிறதா?” என்று கேட்டிருந்தால், அந்த பரங்கியர் என்ன பதிலளித்திருப்பார்? 😏

(இக்கேள்விகளால் அவர் நிலைகுலைந்தாரா, அதிர்ச்சியுற்றாரா, தடுமாறினாரா, உறைந்துபோனாரா என்ற ஆராய்ச்சியை ஒதுக்கிவிட்டு, அவர் என்ன பதில் கொடுத்திருப்பார் என்பதை மட்டும் பார்ப்போம். 😊)

அவர் மட்டுமல்ல, பெரும்பாலான கிறித்தவர்களின் பதில் பின்வருமாறு இருக்கும்:

நமது பாவங்களுக்காக, இஸ்ரவேல் இறையிலாளர் சுமந்த பொருளே குறுக்கை. அவர் அறையப்பட்டு, நமக்காக மரித்ததும் இதில்தான். இது மீட்பின் அடையாளமும் கூட.

(பிரக்ஞானந்தாவின் கேள்விகளால் அந்த பரங்கியர் நிலைகுலைந்தாரோ இல்லையோ, இந்த பதிலால் பிரக்ஞானந்தா நிலைகுலைந்துபோயிருப்பார்!! 😆)

oOo

குறுக்கை என்பது ஐம்பொருள்களால் ஆன அழியக்கூடிய நமதுடலைக் குறிக்கும். அழியக்கூடிய ஒன்றையா வணங்குவது? போற்றுவது?

இவர்கள் வணங்க, சிந்திக்க, கொண்டாட, போற்றவேண்டியது குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் இஸ்ரவேலர் உருவத்தை:

🔸 இதில், குறுக்கை என்பது உடல்

🔸 அறையப்பட்டிருக்கும் இஸ்ரவேலர் என்பது கடும் பயிற்சியினால், கிட்டத்தட்ட இறக்கும் நிலையிலுள்ள மனம்

இவ்வுருவைக் கண்டதும் அவர்களுக்கு தோன்றவேண்டியது: எப்பாடுபட்டாவது உன்னுள் இருக்கும் மனதை அழி!

ஆனால், இவ்வுருவைக் கண்டதும் அவர்களிடமிருந்து கண்ணீர் பெருகும்! சிலர், “2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமா கொன்னுட்டாங்களேயா!” என்று ஒப்பாரியும் வைப்பர்!!

போற்றவேண்டியதைக் கண்டு அழுது புலம்புவார்கள். ஒதுக்கவேண்டியதைக் [குறுக்கை] கண்டு உச்சி குளிர்வார்கள். கனியை விட்டு காயைக் கவர்வார்கள். பழத்தை ஒதுக்கி தோலை உண்பார்கள். கொம்பைவிட்டு வாலைப் பிடிப்பார்கள். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவார்கள். ஆனாலும், இந்த கொலம்பஸ் வகையறாக்கள் இன்றைய உலகின் மேதாவிகளாக அறியப்படுகிறார்கள்!

ஆமென்!! 😂

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮