Monthly Archives: June 2023

வாட்ஸ்அப்-பின் விளம்பரக் காணொளியிலும் குறிமதம்!!

வாட்ஸ்அப் அரட்டைகளை பூட்டி வைக்கும் வசதி பற்றிய காணொளியொன்றை, அந்நிறுவனம் தனது நிலைப்பாட்டில் வைத்திருந்தது. அந்த காணொளியை பார்த்தாலே அது நமது நாட்டிற்காக உருவாக்கப்பட்டதல்ல என்பது புரியும். பல நாடுகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் அந்த காணொளியில் தோன்றும் காட்சிகள்:

– கருப்பின மக்கள்

– குறிமத ஜோடி

– வெள்ளையின மக்கள்

இந்த வரிசை இடம் பெறவேண்டுமெனில், அந்த நிறுவனத்திற்குள் அல்லது அந்த செயலி பயன்படுத்தப்படும் நாடுகளில் பின்வரும் காது குத்தல்கள் நுழைந்திருக்கவேண்டும்:

– மதச்சார்பின்மை

– எம்மதமும் சம்மதம்

– சமூக நீதி

– கருத்துரிமை 

– ஓபியடிப்பவரே உயர்ந்தவர்

இவை நுழையவேண்டுமெனில் அங்கே பின்வரும் உயிரிகள் இருக்கவேண்டும்:

– ஈனவெங்காயம் 

– தாசிமகன் 

– கட்டுமரம் 

– பெருங்கிறுக்கன் 

– மாமாப்பயல்

– கொம்பு சீவப்பட்ட & மறை கழன்ற கேசுகள்

மேற்கண்ட உயிரிகளை உருவாக்கி / வளரவிட்டு, சமூகத்தை சீரழித்து, தரம் தாழ்த்தி, பின்னர், கடை விரித்து, கல்லாக்கட்டவேண்டும் என்பது பாலைவன மதங்களின் சமன்பாடாகும்.

இந்த சமன்பாட்டை உருவாக்கியதில் எம்எல்எம் மதத்திற்கு பெரும் பங்குண்டு. ஆனால், அம்மதம் ஏன் இடம்பெறவில்லையென்று தெரியவில்லை. இதற்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் முதலாளி அம்மதத்தை சேர்ந்தவராவார். அதன் தலைமைச் செயலகம் இயங்கும் அமெரிக்காவில், பெரும்பான்மையோர் அம்மதத்தைச் சேர்ந்தவரேயாவர். ஆனாலும் அம்மதம் வெளிப்படையாக இடம்பெறவில்லை. குறிமதம் மட்டும் இடம் பெற்றுள்ளது.

சைத்தான் மிகப்பெரியவன்!! 😏

ஜான் விக் 4-ல் இடம் பெறும் ஓர் அருமையான உரை! 👌🏽

Wick: Those who cling to death, live.

Caine: Those who cling to life, die.

இந்த அருமையான உரை “ஜான் விக் 4” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதை தமிழுக்கு மாற்றிப் பார்ப்போம்.

– தன்னை நாடுவோர் வாழ்கிறார்கள்

– வையகத்தை நாடுவோர் அழிகிறார்கள்

– தன்மறுப்பை பற்றுவோர் வாழ்கிறார்கள்

– தானென்போர் அழிகிறார்கள்

– தன்னை விடாதிருப்போர் வாழ்கிறார்கள்

– தன்னை விட்டு விலகுவோர் அழிகிறார்கள்

– அசைவற்றதைப் பற்றுவோர் வாழ்கிறார்கள்

– அசைவதைப் பற்றுவோர் அழிகிறார்கள்

> அசைவு -> வையகம் -> மாயை / மாயக்கண்ணன்

> அசைவற்றது -> உள்ளபொருள் -> சிவம்

> வாழ்வது என்பது தானாயிருப்பது

> அழிவது என்பது மறுபிறவியெடுப்பது

எனில்,

– சிவத்தை பற்றுவோர் [தானாய்] இருக்கிறார்கள்

– மாயையை / மாயக்கண்ணனை பற்றுவோர் மறுபிறவியெடுக்கிறார்கள்

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

0° நெடுவரை பாய்ந்தோடிய உஜ்ஜயினி!!

அண்மையில், ஒரு வயதான சோதிடரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் நம் பாரத நேரத்தைப் பற்றி பேசும் போது, பிரயாக்ராஜ் என்று குறிப்பிடாமல் உஜ்ஜயினி என்று குறிப்பிட்டார்! இது அவரையும் அறியாமல் நடந்தது. ஏனெனில், நமது பழைய சோதிட நூல்கள் உஜ்ஜயினியைத்தான் குறிப்பிடுகின்றன! அந்நூல்களைப் படித்த அவரும் அவ்வாறே குறிப்பிட்டார்.

இன்று வேண்டுமானால் நமது நாட்டின் நேரம், கங்கையும் யமுனையும் கூடும் பிரயாக்ராஜை வைத்துக் கணக்கிடப்படலாம். ஆனால், 1860 (அல்லது, 1886)-க்கு முன்னர்வரை நம் நாட்டின் நேரம் மட்டுமல்ல, உலகின் நேரமும் உஜ்ஜயினியை வைத்துத்தான் கணக்கிடப்பட்டது. அதாவது, 0° நெடுவரை (தீர்க்கரேகை) பாய்ந்தோடியது உஜ்ஜயினியில்தான்!! அதிலும், அங்குள்ள ஜோதிர்லிங்கமான திரு மகாகாலேசுவரர் மேல்தான் அந்த நெடுவரை பாய்ந்தது. ஏன்?

அந்த உடையவரின் கீழே சமாதியிலிருக்கும் பெருமானின் 🙏🏽 பங்களிப்பு வானியலுக்கு இன்றியமையாததாக இருந்திருக்கிறது. எனவே, அவரை சிறப்பிக்க, அவரது பங்களிப்பை உலகம் மறவாதிருக்க, அவரது சமாதி அடையாளத்தை நெடுவரைகளின் தொடக்கமாக கொண்டிருந்தனர் நமது முன்னோர்கள். 👏🏽👏🏽😍

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை, வையகம் தட்டையானதென்று நினைத்துக்கொண்டிருந்த முட்டாள் வெள்ளையினத்தால் எவ்வாறு காலக்கணிதத்ததை புரிந்துகொண்டு, 0° நெடுவரையை கிரீன்விச்சிற்கு மாற்றிக்கொள்ளமுடிந்தது? இந்த அறிவுத் திருட்டிற்கு யார் உதவியிருப்பார்கள்? மாற்றியதை மறைக்க யார் உதவியிருப்பார்கள்? 🤬😡

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

பகுத்தறிவு கேள்வி: பிள்ளையார் அமெரிக்காவுக்கு பொருந்துவாரா? 🤭

சில வாரங்களுக்கு முன் நான் சந்தித்த ஒரு பகுத்தறிவுவியாதியை, மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அன்று, திருமலைக்கு மேற்கொள்ளப்படும் நடைபயணத்தையும், பழனிக்கு தூக்கப்படும் காவடியையும் கிண்டல் செய்தவர், இம்முறை, “பிள்ளையார் அமெரிக்காவுக்கு பொருந்துவாரா?” என்று கேட்டார்!

அதாவது, உயிர்வளி போன்று எல்லோருக்கும், எவ்விடத்திற்கும் பொருந்துபவையே மனிதனுக்கு ஏற்றவை; மற்றவை ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியவை என்பது அவரது கருத்தாகும்.

“பிள்ளையார் அமெரிக்காவுக்கு பொருந்துவாரா?” என்று கேட்டவர், “குட்டிச்சுவருக்கு முன்னர் பஸ்கி, தண்டால் எடுப்பது அமெரிக்கர்களுக்கு பொருந்துமா?” என்றோ, “மூன்று ஆணியில் தொங்குபவரை பார்த்து, ‘2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன கொன்னுட்டாங்களேய்யா!’ என்று ஒப்பாரி வைப்பது அரேபியர்களுக்கு பொருந்துமா?” என்றோ கேட்கமாட்டார். ஏனெனில், அவர் ஈனவெங்காயம் 🤮, தாசிமகன் 🤢, திருட்டு இரயிலேறி 🤑 வழிச் செல்பவர்.

அவருக்கு நான் கொடுத்த பதில்கள் & விளக்கங்களின் தொகுப்பே இந்த இடுகையாகும்.

oOO

பிள்ளையார், அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, எந்நாட்டிற்கும், எவ்வுலகிற்கும், எவ்வுயிரிக்கும் பொருந்துவார். எப்படியென்று சற்று பார்ப்போம்.

🔸 யானை உருவம் – நினைவுகளின் தொகுப்பே நீ

🔸 பின் இடதுகையிலுள்ள பாசக்கயிறு – பந்தபாசத்திற்குள் சிக்கிக்கொள்வது நீயே

🔸 பின் வலதுகையிலுள்ள மழு – பந்தபாசத்தை அறுத்தெரிவதும் நீயே

🔸 முன் வலதுகையிலுள்ள அவரது ஒடித்த தந்தம் – உனது வாழ்க்கையை எழுதுவது நீயே

🔸 முன் இடதுகையிலுள்ள இனிப்பு – நீ தேடும் மெய்யறிவு உன்னிடமேயுள்ளது

🔸 ஊர்தியான எலி – கட்டுப்படுத்தப்பட்ட ஆசை

மொத்தத்தில், பிள்ளையாரின் திருவுருவும் உணர்த்துவது: உன் வாழ்க்கை உன் கையில்!

இக்கொள்கையுடைய மனிதர் இல்லாத நாடோ, உலகமோ இருக்கமுடியுமா?

இவ்வகையில்தான் அனைத்து இறையுருவங்களையும் அணுகவேண்டும்; சிந்திக்கவேண்டும்.

oOo

பிள்ளையார் – அறிவு

முருகர் – மனம்

அம்மை – காணப்படும் யாவும்

அப்பன் – காண்பான்

இவ்விளக்கத்திற்கு உட்படாத உயிரியும் உலகமும் எங்கேயும் இருக்கமுடியுமா?

oOo

🔸 ஒருவர் சிவப்பு தரித்திருந்தால், “எங்கெங்கு காணினும் சக்தியடா!” என்பது அவரது கண்ணோட்டம் என்பது பொருளாகும்.

🔸 இதுவே, அவர் தரித்திருப்பது திருநீறு எனில், “காண்பவை யாவும் பொய். காண்பவனே மெய்.” என்பது அவரது கண்ணோட்டம் என்பது பொருளாகும்.

பன்நெடுங்காலமாக நடந்த சமய & அரசியல் படையெடுப்புகளாலும், தரமற்றவர்களின் கைகளில் சமூகமும் ஆட்சியும் உள்ளதாலும், எல்லாம் இன்று வெற்றுச் சடங்காகிவிட்டன.

oOo

கடலின் ஆழத்தில் வாழும் ஒரு குட்டி மீன், ஒரு பெரிய மீனிடம் சென்று, “எல்லோரும், ‘கடல்’ ‘கடல்’ என்கிறார்கள். நான் சென்று அந்த கடலை பார்த்துவிட்டு வரப்போகிறேன்” என்றதாம். திடுக்கிட்ட பெரிய மீன், “நீ இருப்பதே அந்த கடலில்தான்” என்றதாம். அதை ஏற்றுக் கொள்ளாத அந்த குட்டி மீன், “இதுவா கடல்? இது வெறும் நீர்! நான் சென்று, கடலை பார்த்துவிட்டு வந்து, உங்களுக்கு விளக்குகிறேன்.” என்று கூறிவிட்டு, புறப்பட்டதாம்! 😀

மெய்யியலைப் பொறுத்தவரை, இந்த குட்டி மீனின் நிலையில்தான் நம்மில் பலர் உள்ளனர்.

(இந்த மீன் கதை அவரை அடக்கிவிட்டது. ஆனாலும், அவர் திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால், இனி, நம் சமயத்தைப் பற்றி தாழ்வாக என்னிடம் பேசமாட்டார் என்று நம்புகிறேன். 😌)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

சூத்திரன்: இன்றைய உலகில் யாவருக்கும் பொருந்தும் பெயர்ச்சொல்!

மரபணு ஆய்வின் வழியாக பல உண்மைகள் வெளிவந்தபிறகும், அக்கால சமூகங்களைப் பற்றிய பல செய்திகள் வெளிவந்தபிறகும், இன்னும் சூத்திரன் என்ற பெயர் சொல்லை தவறான கண்ணோட்டத்தில் பயன்படுத்துவோர் உள்ளனர்! 😞

உண்மையில், இது ஆழமான பொருள் கொண்ட சொல்லாகும். சில சமூகங்களை மட்டும் குறிக்காது. இச்சொல்லை இதன் உண்மையான பொருளில் பயன்படுத்தினால், இன்று, அனைவரையுமே குறிக்கும்! ☺️

இந்த ஆரியச்சொல்லின் பொருள்: எப்போதும் கவலையில் / வருத்தத்தில் இருப்பவன்.

கீதோபதேச நிகழ்வின் தொடக்கத்தில், பெருங்கவலையுடன் இருக்கும் அர்ஜுனனை பார்த்து, “ஏன் சூத்திரனை போலிருக்கிறாய்?” என்று திரு கண்ணபிரான் கேட்கிறார், அதாவது, “ஏன் கவலையுள்ளவனாய் இருக்கிறாய்?” என்பது பொருளாகும்.

🔸 கவலை, வருத்தம், துயரம்… போன்ற உணர்ச்சிகள் எதனால் தோன்றுகின்றன?

பற்றுகளினால்.

🔸 ஏன் பற்றுகள் தோன்றுகின்றன?

மனதை சலிக்கவிடுவதால்.

🔸 ஏன் மனதை சலிக்கவிடுகிறோம்?

நம் கண் முன்னே விரியும் உலக காட்சியை உண்மையென்று நம்புவதால்.

இவ்வகையில், மனதை சலிக்கவிடும் நாம் அனைவருமே சூத்திரர்கள்தாம்!! 😀

🔸 அடுத்து, மனதை சலிக்கவிடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

அக்காலத்திற்கேற்ற பதில்: நமக்கேற்ற மெய்யாசிரியரை அணுகி, அவருக்கு பணிவிடைகள் செய்துகொண்டு, அவர் அறிவுருத்தும் பயிற்சியை பயின்றுகொண்டு, அவராக நம்மை வெளியேற்றும்வரை அவருடன் இருக்கவேண்டும்.

இதையே, சூத்திரர்கள் மற்ற பிரிவினருக்கு பணிவிடை செய்யவேண்டும் என்று திரித்துவிட்டனர்!!

🔸 இறுதியாக, எதற்காக இப்படிப்பட்ட சொல்லை உருவாக்கியிருப்பார்கள் என்று பார்ப்போம்.

உதயகீதம் திரைப்படத்தில் இடம்பெற்ற தேங்காய் நகைசுவை காட்சியை நினைவுகூறுவோம். “ஒர்ரு ரூபாய், ரெண்டு ரூபாய்க்கெல்லாம் தேங்காய் இல்லீங்களா? சாமிக்கு உடைக்கிறமாதிரி.” என்று கவுண்டமணி கேட்க, அதற்கு அந்த கடைக்காரர், திடுக்கிட்டு, “ஒர்ரு ரூபாய்க்கு தேங்காயா? ஏன்யா நீ இவ்ளோ நாளா உள்ள இருந்திட்டு வந்தயா?” என்று திருப்பிக்கேட்பார். மூன்று ரூபாய்க்கு குறைவாக தேங்காய் கிடைக்காது என்பது பரவலான அறிவான பின்னரும், ஒருவர் குறைத்துக்கேட்கிறார் என்றால் அவர் நாட்டுநடப்பு அறியாதவராகிறார். ஏளனத்தையும் பட்டப்பெயரையும் சம்பாதிக்கிறார்.

இங்ஙனமே, அன்று, “காண்பவை யாவும் பொய். காண்பவனே மெய்.”, “நாம் அழியும் உடலல்ல”, “எதையும் செய்வது நாமல்ல” போன்ற மெய்யறிவு பரவலாக இருந்திருக்கவேண்டும். எதையும் செய்வது நாமல்லவெனில், எதையும் செய்யும் அன்னைக்கே இன்பமும் துன்பமும் என்றாகிறது. எனில், எதைப் பற்றியும் நாம் கவலை கொள்வது தவறு என்றாகிறது. பரவலாக அனைவரிடமும் இருந்த இவ்வறிவு ஒரு சிலரிடம் மட்டுமில்லாமல் போகும்போது, அவர்களை “சூத்திரன்” (கவலை கொள்பவன் / மெய்யறிவு இல்லாதவன்) என்று ஏளனமாக அழைத்திருக்கவேண்டும். அவர்களை மெய்யாசிரியர்களிடம் சென்று, தங்கியிருந்து, பணிவிடை செய்து, மெய்யறிவு பெற அறிவுறுத்தி இருக்கவேண்டும். காலப்போக்கில் ஏளனம் என்பது அருவருப்பாகவும், மெய்யாசிரியர் என்பது மேல்தட்டு மக்களாகவும் மாறியிருக்கவேண்டும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼