மோடி பாபா!! 😃

ஜி,

மோடி ஜி“-ன்ற நிலையிலிருந்து “மோடி பாபா“-ங்கற நிலைக்கு, நீங்க நகர முயற்சிக்கிறீங்கன்றது நல்லா தெரியுது. ஆனா, இன்னும் பயிற்சி எடுக்கணும், ஜி. ஏன்னா, நீங்க மட்டுமில்லை, உங்க நண்பரான அமெரிக்க புறம்போக்கும் (பில் கேட்ஸ்) இறைவனின் படைப்புதான். உங்க ஊரு மாலிக்காஃபூரும் இறைவனின் படைப்புதான். எங்க ஊரு இராமசாமியும் இறைவனின் படைப்புதான். தூசு முதல், நீங்க ஒக்காந்து தேச்சுட்டிருக்குற கட்டிடம் வரைக்கும், எல்லாமே இறைவனின் படைப்புதான். வேணும்னா, உங்க பூசாரி கூட்டத்துக்கிட்ட கேட்டுப் பாருங்க, ஜி. படங்காட்டுறதுக்குனே பொறந்தவங்க. நல்லா சொல்லிக் கொடுப்பாங்க.

அப்புறம் ஜி, நீங்க குறிப்பிட்ட “இறைவனின் திருப்பணி”-ங்கறது இதுதானே:

– தெற்கினுடைய செழிப்பை வடக்கிற்கு மாற்றுவது

– பணம் படைத்த பொதுமக்களிடமிருந்து கறந்து, பரம ஏழைகளான அம்பானி & அதானி வகையறாக்களுக்கு கொடுப்பது

சரியா, ஜி? மன்னிக்கவும். சரியா, பாபா? 😜

✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽👊🏽

“தமிழ் தான் எனது மூச்சு, பேச்சு, வாட்சு” என்று ரீல் விட்ட உயிரிகள், இன்று, “ஒடிசாவை தமிழன் ஆளலாமா?”, “தொலைந்து போன பூரி கோயிலின் கருவூலச் சாவிகள் தமிழ்நாடு சென்றிருக்கும்”, “உ.பி. தலைவர்களை தமிழ்நாட்டில் கிண்டலடிக்கிறார்கள்” என்று பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன்?

இனி என்ன செய்தாலும் தமிழ்நாட்டை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்துவிட்டதால், இருக்கும் வடக்கத்திய ஓட்டு வங்கியையாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு இறங்கியிருக்கிறார்கள்.

இவ்விரு உயிரிகளால் இந்து சமயத்திற்கு கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு… கோவிந்தா.. கோவிந்தா!! 😮‍💨

oOOo

Leave a comment